Monday, January 30, 2006

32.என்ன சொல்லப் போகிறாய்?

படம் :கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
இசை : A.R.ரஹ்மான்
வரிகள் : வைரமுத்து
குரல் : ஷங்கர் மகாதேவன்
------------------------------------------------------------------
இல்லை இல்லை சொல்ல, ஒரு கணம் போதும்!
இல்லை என்ற சொல்லை, தாங்குவதென்றால்,
இன்னும் இன்னும் எனக்கோர், ஜென்மம் வேண்டும்!
என்ன சொல்லப் போகிறாய்?
சந்தனத் தென்றலை, ஜன்னல்கள் தண்டித்தல்
நியாயமா? நியாயமா?
காதலின் கேள்விக்குக் கண்களின் பதில் என்ன?
மெளனமா? மெளனமா?
அன்பே எந்தன் காதல் சொல்ல, நொடி ஒன்று போதுமே!
அதை நானும் மெய்ப்பிக்கத்தானே, ஒரு ஆயுள் வேண்டுமே!
(இல்லை)
இதயம் ஒரு கண்ணாடி! உனது பிம்பம் வீழ்ந்ததடி!
இதுதான் உன் சொந்தம், இதயம் சொன்னதடி...!
கண்ணாடி பிம்பம் கட்ட, கயிறொன்றும் இல்லையடி!
கண்ணாடி ஊஞ்சல் பிம்பம் ஆடுதடி!
நீ ஒன்று சொல்லடி பெண்ணே - இல்லை
நின்று கொல்லடி கண்ணே!
எந்தன் வாழ்க்கையே உந்தன் விழிவிளிம்பில்,
என்னைத் துரத்தாதே! உயிர் கரையேறாதே!
(இல்லை)
விடியல் வந்த பின்னாலும் விடியாத இரவு எது?
பூவாசம் வீசும் உந்தன் கூந்தலடி!
இவ்வுலகம் இருண்ட பின்னும் இருளாத பாகம் எது?
கதிர் வந்து பாயும் உந்தன் கண்களடி!
பல உலக அழகிகள் கூடி - உன்
பாதம் கழுவலாம் வாடி!
என் தளிர் மலரே இன்னும் தயக்கம் என்ன?
என்னைப் புரியாதா இது வாழ்வா? சாவா?
(இல்லை)
என்ன சொல்லப் போகிறாய்?என்ன சொல்லப் போகிறாய்?
நியாயமா? நியாயமா?
என்ன சொல்லப் போகிறாய்?என்ன சொல்லப் போகிறாய்?
மெளனமா? மெளனமா?
என்ன சொல்லப் போகிறாய்.....?

Sunday, January 29, 2006

31.இதழ்களில் பனித்துளி..! பருகிடும் கதிரொளி!

படம் : என் சுவாசக்காற்றே
இசை : A.R.ரஹ்மான்
வரிகள் : வைரமுத்து
குரல் : S.P.பாலசுப்ரமணியம்&சித்ரா
----------------------------------------------------------------
பெ:
கன்றும் உண்ணாது கலத்தினும் படாது
நல்லான் தீம்பால் நிலத்துக் கா அங்கு
எனக்கும் ஆகாது என்னைக்கு முதவாது
பசலை யுணீஇய வேண்டும்
திதலை யாகத்தென் மாமைக் கவினே!

தீண்டாய்! மெய் தீண்டாய்! தாண்டாய்! படி தாண்டாய்!
பெ:
தீண்டாய்! மெய் தீண்டாய்! தாண்டாய்! படி தாண்டாய்!
ஒரு விரல் வந்து என்னைத் தீண்டியதே!
என் நரம்போடு வீணை மீட்டியதே!
மனம் அவன்தானா இவன் என்று திடுக்கிட்டதே...!
ஆ:
தீண்டாய்! மெய் தீண்டாய்! தாண்டாய்! படி தாண்டாய்!
ஒரு விரல் வந்து உன்னைத் தீண்டியதோ!
உன் நரம்போடு வீணை மீட்டியதோ!
உன் உயிர்க்குள்ளே காதல் அம்பைத் தொடுத்திட்டதோ...!
(தீண்டாய்)
பெ:
விழியோடும் தீண்டல் உண்டு, விரலோடும் தீண்டல் உண்டு,
இரண்டோடும் பேதம் உள்ளது!
ஆ:
விழித்தீண்டல் உயிர் கிள்ளும், விரல் தீண்டல் உள்ளம் கிள்ளும்,
அதுதானே நீ சொல்வது?
பெ:
நதியோரப் பூவின்மேலே, ஜதிபாடும் சாரல் போலே,
என்னில் இன்பதுன்பம் செய்குவதோ...?
ஆ:
ஒரு கன்னம் தந்தேன் முன்னே, மறு கன்னம் தந்தாய் பெண்ணே,
ஏசுநாதர் காற்று வந்து வீசியதோ?
பெ:
உறவின் உயிரே! உயிரே! என்னைப் பெண்ணாய்ச் செய்க!
ஆ:
அழகே! அழகே! உன் ஆசை வெல்க!
(தீண்டாய்)
ஆ:
கடலோடு முத்தம் தந்தும், கலையாத வானம் போல,
உடலோடு ஒட்டிக்கொள்ளவோ!
பெ:
உடலோடு அங்கும் இங்கும், உறைகின்ற ஜீவன் போல,
உன்னோடு கட்டிக்கொள்ளவோ!
ஆ:
உனைத் தேடி மண்ணில் வந்தேன், எனைத்தேடி நீயும் வந்தாய்,
உன்னை நானும் என்னை நீயும் கண்டுகொண்டோம்!
பெ:
பல பேர்கள் காதல் செய்து, பழங்காதல் தீரும்போது,
பூமி வாழப் புதிய காதல் கொண்டுவந்தோம்!
ஆ:
பனியோ? பனியின் துளியோ? உன் இதழ்மேல் என்ன?
பெ:
பனியோ? தேனோ? நீ சுவைத்தால் என்ன?
(தீண்டாய் )

Saturday, January 28, 2006

30.கவிதை...கவிதைக்காக....!கவியும்தான்!

படம் : கேப்டன் மகள்
இசை : ஹம்சலேகா
வரிகள் : வைரமுத்து
குரல் : S.P.பாலசுப்ரமணியம்
--------------------------------------------------------
எந்த பெண்ணிலும் இல்லாத ஒன்று
ஏதோ, அது ஏதோ?
அடி ஏதோ உன்னிடம் இருக்கிறது!
அதை அறியாமல் விடமாட்டேன்!
அது வரை உன்னைத் தொடமாட்டேன்!
(எந்த பெண்ணிலும்)
கூந்தல் முடிகள், நெற்றி பரப்பில்
கோலம் போடுதே அதுவா?
கோலம் போடுதே அதுவா?
சிரிக்கும் போது கண்ணில் மின்னல்
தெரித்து ஓடுதே அதுவா?
தெரித்து ஓடுதே அதுவா?
மூக்கின் மேலே மூக்குத்தி போலே
மச்சம் உள்ளதே அதுவா? அதுவா? அதுவா?
கழுத்தின் கீழே கவிதைகள் ரெண்டு
மிச்சம் உள்ளதே அதுவா? அதுவா? அதுவா?
அதை அறியாமல் விடமாட்டேன் !
அது வரை உன்னைத் தொடமாட்டேன்!
(எந்த பெண்ணிலும்)
முல்லை நிறத்துப் பற்களில் ஒன்று
தள்ளி உள்ளதே அதுவா?
தள்ளி உள்ளதே அதுவா?
சங்கு கழுத்தைப் பாசி மணிகள்
தடுவுகின்றதே அதுவா?
தடுவுகின்றதே அதுவா?
ஒவ்வொரு வாக்கியம் முடியும் போதும்
புன்னகை செய்வாய் அதுவா? அதுவா? அதுவா?
ஓரிரு வார்தை தப்பாய் போனால்
உதடு கடிப்பாய் அதுவா? அதுவா? அதுவா?
அதை அறியாமல் விடமாட்டேன்!
அது வரை உன்னை தொடமாட்டேன்!
(எந்த பெண்ணிலும்)

29.அன்பே சிவம்!

படம் : அன்பே சிவம்
இசை : வித்யாசாகர்
வரிகள் : வைரமுத்து
குரல் : கமல்ஹாசன்&குழு
---------------------------------------------------------------
ஆ:
யார் யார் சிவம்? நீ, நான், சிவம்!
வாழ்வே தவம்! அன்பே சிவம்!
(யார்)
ஆ:
ஆத்திகம் பேசும் அடியார்க்கெல்லாம் சிவமே அன்பாகும்!
நாத்திகம் பேசும் நல்லவருக்கோ அன்பே சிவமாகும்!
கு:
அன்பே சிவம்! அன்பே சிவம்! என்றும்,
அன்பே சிவம்! அன்பே சிவம்! எங்கும்,
அன்பே சிவம்! அன்பே சிவம்! என்றும்,
அன்பே சிவம்! அன்பே சிவம்! எங்கும்...!
(யார்)
ஆ:
இதயம் என்பது சதைதான் என்றால் எரிதழல் தின்றுவிடும்!
அன்பின் கருவி இதயம் என்றால் சாவை வென்றுவிடும்!
(அன்பே)
(யார்)
ஆ:
அன்பின் பாதை சேர்ந்தவனுக்கு முடிவே இல்லையடா!
மனதின் நீளம் எதுவோ, அதுவே வாழ்வின் நீளமடா!
(அன்பே)
(யார்)

28.இவன் ஆளவந்தவன்!

படம் : ஆளவந்தான்
இசை : ஷங்கர், எஷான்& லாய்
வரிகள் : வைரமுத்து
குரல் : ஷங்கர் மகாதேவன்
-----------------------------------------------------------
ஆளவந்தான்...!ஆளவந்தான்...!
ஆளவந்தான்...!ஆளவந்தான்...!
ஆளவந்தான்...!ஆளவந்தான்...!

ஐம்பெரும் கண்டங்கள் ஆளவந்தான்!
ஆயிரம் சூரியன் போலவந்தான்!
வாழ்க்கையை முழுமையாய் வாழவந்தான்!
அரசாண்ட பாண்டியன் மீளவந்தான்!
சூல்கொண்ட படை ஒன்று சூழவந்தான்!
நீலவான் எல்லை வரை நீளவந்தான்!
மூச்சிலே தீக்கனல் மூளவந்தான்!
மானுடப் பகையெல்லாம் ஆளவந்தான்!
அருள் கொண்ட மேகமாய்த் தாழவந்தான்!
ஆயிரம் சூரியன் போலவந்தான்!
(ஆளவந்தான்)

27.அமிலம் வீசிப்போன, அவளுக்காக...!

படம் : அமர்க்களம்
இசை : பரத்வாஜ்
வரிகள் : வைரமுத்து
குரல் : S.P.பாலசுப்ரமணியம்
--------------------------------------------------------------------
மேகங்கள் என்னைத் தொட்டுப் போனதுண்டு - சில
மின்னல்கள் என்னை உரசிப் போனதுண்டு!
மேகங்கள் என்னைத் தொட்டுப் போனதுண்டு - சில
மின்னல்கள் என்னை உரசிப் போனதுண்டு!
தேகங்கள் ஒன்றிரண்டு கடந்ததுண்டு - மனம்
சில்லென்று சில போது சிலிர்த்ததுண்டு!
மோகனமே உன்னைப் போல - என்னை யாரும்
மூச்சுவரை கொள்ளையிட்டுப் போனதில்லை!
ஆகமொத்தம் என் நெஞ்சில் உன்னைப் போல -
எரி அமிலத்தை வீசியவர் எவருமில்லை!
(மேகங்கள்)
பிரிவொன்று நேருமென்று தெரியும் பெண்ணே - என்
பிரியத்தை அதனால் குறைக்க மாட்டேன்!
எரியும் உடலென்று தெரியும் பெண்ணே!
என் இளமைக்குத் தீயிட்டு எரிக்க மாட்டேன்!
(மேகங்கள்)
கண்ணிமையில் சாமரங்கள் வீசும் காற்றில் - என்
காதல் மனம் துண்டுத் துண்டாய் உடையக் கண்டேன்!
துண்டு துண்டாய் உடைந்த மனத் துகளையெல்லாம் - அடி
தூயவளே உனக்குள் தொலைத்து விட்டேன்!
(மேகங்கள்)
செவ்வாயில் ஜீவராசி உண்டா என்றே - அடி
தினந்தோறும் விஞ்ஞானம் தேடல் கொள்ளும்! - உன்
செவ்வாயில் உள்ளதடி எனது ஜீவன் - அது
தெரியாமல் விஞ்ஞானம் எதனை வெல்லும்?
எவ்வாறு கண்ணிரண்டில் கலந்து போனேன் - அடி
எவ்வாறு மடியோடு தொலைந்து போனேன்?
இவ்வாறு தனிமையில் பேசிக்கொண்டேன் - என்
இரவினைக் கவிதையாய் மொழிபெயர்த்தேன்!
(மேகங்கள்)
மூடி மூடி வைத்தாலும் விதைகளெல்லாம் - மண்ணை
முட்டி முட்டி முளைப்பது உயிரின் சாட்சி!
ஓடி ஓடிப் போகாதே ஊமைப்பெண்ணே! - நாம்
உயிரோடு வாழ்வதற்குக் காதல் சாட்சி...!
(மேகங்கள்)

26.ஊர் சிரிக்க, அழும் நிலவு...

படம்:ஆயிரத்தில் ஒருவன்
இசை : M.S.விஸ்வநாதன் & ராமமூர்த்தி
வரிகள் : கண்ணதாசன்
குரல் : T.M.சௌந்தரராஜன்
------------------------------------------------
ஓடும் மேகங்களே! ஒருசொல் கேளீரோ?
ஆடும் மனதினிலே ஆறுதல் தாரீரோ?
(ஆடும்)
(ஓடும்)
நாடாளும் வண்ணமயில் காவியத்தில் நான் தலைவன்!
நாட்டிலுள்ள அடிமைகளில் ஆயிரத்தில் நான் ஒருவன்!
மாளிகையே அவள் வீடு! மரக்கிளையில் என் கூடு!
வாடுவதே என் பாடு!
இதில் நான் அந்த மான் நெஞ்சை நாடுவதெங்கே கூறு!
(ஓடும்)
ஊரெல்லாம் தூங்கையிலே விழித்திருக்கும் என் இரவு!
உலகமெல்லாம் சிரிக்கையிலே அழுதிருக்கும் அந்த நிலவு!
பாதையிலே வெகுதூரம், பயணம் போகின்ற நேரம்,
காதலையா மனம் தேடும்?
இதில் நான் அந்த மான் நெஞ்சை நாடுவதெங்கே கூறு!
(ஓடும்)

25.சர்வம்....தெய்வீகம்!

படம் : ஆண்டவன் கட்டளை
இசை : M.S.விஸ்வநாதன் & ராமமூர்த்தி
வரிகள் : கண்ணதாசன்
குரல் : P.சுசீலா
-------------------------------------------------------------
அழகே வா! அருகே வா!
அலையே வா! தலைவா வா!
அழகே வா! வா! வா! அழகே வா!
(அழகே)
ஆலயக் கலசம் ஆதவனாலே
மின்னுதல் போலே மின்னுது இங்கே!
(ஆலய)
(அழகே)
ஒரு கேள்வியை இங்கே கேட்டுவிட்டேன்!
நான் கேட்டதை எங்கே போட்டுவிட்டாய்?
என்ன தேடுகின்றாய்? எங்கே ஓடுகின்றாய்?
உந்தன் தேவைகளை ஏன் மூடுகின்றாய்?
(உந்தன்)
(அழகே)
இன்ப ஆற்றினில் ஓடம் ஓடி வரும்!
அந்த ஓடத்தில் உலகம் கூடிவரும்!
நம் முன்னவர்கள், வெறும் முனிவரில்லை!
அவர் தனித்திருந்தால் நாம் பிறப்பதில்லை!
(அவர்)
(அழகே)

Friday, January 27, 2006

24.அழகுதான்! நதியும்..பெண்ணும்!

படம் : ரிதம்
இசை : A.R.ரஹ்மான்
வரிகள் : வைரமுத்து
குரல் : உன்னிமேனன் & குழு
--------------------------------------------------------------------
ஆ:
தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா!
தீம்தனனா தீம்தனனா திரனா!
தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா!
தீம்தனனா தீம்தனனா திரனா!
நதியே நதியே காதல் நதியே! நீயும் பெண்தானே!

அடி நீயும் பெண்தானே!
ஒன்றா இரண்டா காரணம் நூறு! கேட்டால் சொல்வேனே!
நீ கேட்டால் சொல்வேனே!
(தீம்தனனா)
ஆ:
நடந்தால் ஆறு! எழுந்தால் அருவி! நின்றால் கடலல்லோ!
சமைந்தால் குமரி! மணந்தால் மனைவி! பெற்றால் தாயல்லோ!
சிறு நதிகளே! நதியிடும் கரைகளே!
கரைதொடும் நுரைகளே! நுரைகளில் இவள் முகமே!
(சிறு)
(தீம்தனனா)
கு:
தினம் மோதும், கரை தோறும்! அட ஆறும் இசை பாடும்!
ஜில் ஜில் ஜில் என்ற ஸ்ருதியிலே!
கங்கை வரும், யமுனை வரும், வைகை வரும், பொருணை வரும்,
ஜல் ஜல் ஜல் என்ற நடையிலே!
(தினம்)
ஆ:
காதலி அருமை பிரிவில்! மனைவியின் அருமை மறைவில்!
நீரின் அருமை அறிவாய் கோடையிலே!
வெட்கம் வந்தால் உறையும்! விரல்கள் தொட்டால் உருகும்!
நீரும் பெண்ணும் ஒன்று வாடையிலே!
தண்ணீர்க் குடத்தில் பிறக்கிறோம் ஓஹோ!
தண்ணீர்க் கரையில் முடிக்கிறோம் ஓஹோ!
(தண்ணீர்)
(தீம்தனனா)
ஆ:
வண்ண வண்ணப் பெண்ணே! வட்டமிடும் நதியே!
வளைவுகள் அழகு! உங்கள் வளைவுகள் அழகு!
மெல்லிசைகள் படித்தல்! மேடு பள்ளம் மறைத்தல்!
நதிகளின் குணமே! அது நங்கையின் குணமே!
(சிறு)
(தினம்)
(தீம்தனனா)
ஆ:
தீங்கனியில் சாறாகி, பூக்களிலே தேனாகி,
பசுவினிலே பாலாகும் நீரே!
தாயருகே சேயாகி, தலைவனிடம் பாயாகி,
சேயருகே தாயாகும் பெண்ணே!
பூங்குயிலே! பூங்குயிலே!
பெண்ணும் ஆறும் வடிவம் மாறக்கூடும்!
நீர் நினைத்தால், பெண் நினைத்தால்,
கரை(றை)கள் யாவும் கரைந்து போகக் கூடும்!
(நதியே)

23.ஆயிரம் யானை கொன்றால் பரணி!

படம் : நந்தா
இசை : யுவன் ஷங்கர் ராஜா
வரிகள் : நா.முத்துக்குமார்
குரல் : உன்னி கிருஷ்ணன்
------------------------------------------------------------
ஓர் ஆயிரம் யானை கொன்றால் பரணி!
ஆதலால் யுத்தம் இருக்கு கவனி!
தாய் வயிற்றில், தலை கீழாக!
உன் வழியோ இல்லை நேராக!
தோள் சாய, புது உறவிங்கே!
தூண் எல்லாம் இனி தூளாக!
(ஓர் ஆயிரம்)
குழலோசை இல்லை, குயிலோசை இல்லை,
இடியோசை ஒன்றே அறிந்தாயே!
முரணோடு வாழ்ந்து, முள்ளோடு சேர்ந்து,
அன்பால் இன்று பூப்பூக்கின்றாய்!
ஒரு ராஜா வருந்தாமல்,
அட புத்தன் ஜனனம் இல்லை!
மனம் நொந்து நொறுங்காமல்,
அட சித்தன் பிறப்பதும் இல்லை!
வாழ்ந்தாய் தீயின் மடியில்...!
சேர்ந்தாய் தீர்த்தக் கரையில்....!
(ஓர் ஆயிரம்)

22.கடவுள், மிருகம்...மத்தியில் நான்!

படம் : ஆளவந்தான்
இசை : ஷங்கர், எஷான்& லாய்
வரிகள் : வைரமுத்து
குரல் : கமல்ஹாசன்
------------------------------------------------------------
கடவுள் பாதி! மிருகம் பாதி!
கலந்து செய்த கலவை நான்!
வெளியே மிருகம்! உள்ளே கடவுள்!
விளங்க முடியா கவிதை நான்!
மிருகம் கொன்று, மிருகம் கொன்று,
கடவுள் வளர்க்கப் பார்க்கின்றேன்!
ஆனால்,
கடவுள் கொன்று உணவாய்த் தின்று,
மிருகம் மட்டும் வளர்கிறதே!
நந்தகுமாரா! நந்தகுமாரா!
நாளை மிருகம் கொல்வாயா?
மிருகம் கொன்ற எச்சம் கொண்டு,
மீண்டும் கடவுள் செய்வாயா?
குரங்கிலிருந்து மனிதன் என்றால்,
மனிதன் இறையாய் ஜனிப்பானா?
மிருக ஜாதியில் பிறந்த மனிதா!
தேவ ஜோதியில் கலப்பாயா?
(கடவுள்)
கடவுள் பாதி! மிருகம் பாதி!
கலந்து செய்த கலவை நான்!

காற்றில் ஏறி, மழையில் ஆடி,
கவிதை பாடும் பறவை நான்!
ஒவ்வொரு துளியும், ஒவ்வொரு துளியும்,
உயிரின் வேர்வை குளிர்கிறதே!
எல்லா துளியும் குளிரும்போது,
இரு துளி மட்டும் சுடுகிறதே!
நந்தகுமாரா! நந்தகுமாரா!
மழை நீர் சுடாது தெரியாதா?
கன்னம் வழிகிற கண்ணீர் துளிதான்,
வெந்நீர் துளியென அறிவாயா?
சுட்ட மழையும், சுடாத மழையும்,
ஒன்றாய்க் கண்டவன் நீதானே!
தண்ணீர் மழையைக் கண்ணீர் மழையில்,
குளிக்க வைத்தவன் நீதானே...!
(கடவுள்)

21.செம்புலப் பெயல் நீர் போல், கலந்த நெஞ்சங்கள்....!

படம் : இருவர்
இசை : A.R.ரஹ்மான்
வரிகள் : வைரமுத்து
குரல்: உன்னி கிருஷ்ணன்& பாம்பே ஜெயஸ்ரீ
------------------------------------------------------------------------
ஆ:
நறுமுகையே! நறுமுகையே!
நீயொரு நாழிகை நில்லாய்!
செங்கனி ஊறிய வாய் திறந்து,
நீயொரு திருமொழி சொல்லாய்!
அற்றைத் திங்கள் அந்நிலவில்,
நெற்றித்தரள நீர்வடிய,
கொற்றப்பொய்கை ஆடியவள் நீயா?
(அற்றை)
பெ:
திருமகனே! திருமகனே!
நீ ஒரு நாழிகை பாராய்!
வெண்ணிறப் புரவியில் வந்தவனே!
வேல்விழி மொழிகள் கேளாய்!
அற்றைத் திங்கள் அந்நிலவில்,
கொற்றப்பொய்கை ஆடுகையில்,
ஒற்றைப்பார்வை பார்த்தவனும் நீயா?
(அற்றை)
(நறுமுகையே)
ஆ:
மங்கை மான்விழி அம்புகள் என் மார்துளைத்ததென்ன?
மங்கை மான்விழி அம்புகள் என் மார்துளைத்ததென்ன?
பெ:
பாண்டிநாடனைக் கண்டு என் மனம் பசலை கொண்டதென்ன?
ஆ:
நிலாவிலே பார்த்த வண்ணம் கனாவிலே தோன்றும் இன்னும்
நிலாவிலே பார்த்த வண்ணம் கனாவிலே தோன்றும் இன்னும்
பெ:
இளைத்தேன், துடித்தேன், பொறுக்கவில்லை!
இடையினில் மேகலை இருக்கவில்லை!
(நறுமுகையே)
பெ:
யாயும் யாயும் யாராகியரோனென்று நேர்ந்ததென்ன?
யாயும் யாயும் யாராகியரோனென்று நேர்ந்ததென்ன?
ஆ:
யானும் நீயும் எவ்வழியறிதும் உறவு சேர்ந்ததென்ன?
பெ:
ஒரே ஒரு தீண்டல் செய்தாய்!உயிர்க்கொடி பூத்ததென்ன?
ஒரே ஒரு தீண்டல் செய்தாய்!உயிர்க்கொடி பூத்ததென்ன?
ஆ:
செம்புலம் சேர்ந்த நீர்த்துளி போல்,
அன்புடை நெஞ்சம் கலந்ததென்ன?
(திருமகனே)

20.அவளொரு தேவதை! நானொரு யாசகன்!

படம் : காதல் கொண்டேன்
இசை : யுவன் ஷங்கர் ராஜா
வரிகள் : நா.முத்துக்குமார்
குரல் : ஹரிஷ் ராகவேந்திரா
----------------------------------------------------------------
தேவதையைக் கண்டேன்! காதலில் விழுந்தேன்!
என் உயிருடன் கலந்துவிட்டாள்.
நெஞ்சுக்குள் நுழைந்தாள்! மூச்சினில் நிறைந்தாள்!
என் முகவரி மாற்றி வைத்தாள்.
ஒரு வண்ணத்துப்பூச்சி எந்தன் வழிதேடி வந்தது!
அதன் வண்ணங்கள் மட்டும் இன்று விரலோடு உள்ளது!
தீக்குள்ளே விரல் வைத்தேன்,
தனித்தீவில் கடைவைத்தேன்,
மணல்வீடு கட்டிவைத்தேன்!
(தேவதையை)
தேவதை தேவதை தேவதை தேவதை!
அவளொரு தேவதை தேவதை தேவதை தேவதை தேவதை!
தேவதை தேவதை தேவதை தேவதை!
அவளொரு தேவதை தேவதை தேவதை தேவதை தேவதை!

விழி ஓரமாய் ஒரு நீர்த்துளி! வழியுதே என் காதலி!
அதன் ஆழங்கள் நீ உணர்ந்தால் போதும்! போதும்! போதும்!
அழியாமலே ஒரு ஞாபகம், அலைபாயுதே என்ன காரணம்?
அருகாமையில் உன் வாசம் வீசினால் சுவாசம் சூடேறிடும்!
கல்லறை மேலே பூக்கும் பூக்கள்,
கூந்தலைப் போய்த்தான் சேராது!
எத்தனை காதல்? எத்தனை ஆசை?
தடுமாறுதே! தடம் மாறுதே!
அடி பூமி கனவில் உடைந்து போகுதே
(தேவதையை)
தோழியே ஒரு நேரத்தில் தோளிலே நீ சாய்கையில்,
பாவியாய் மனம் பாழாய்ப் போகும் போகும் போகும்!
சோழியாய் எனை சுழற்றினாய் சூழ்நிலை திசை மாற்றினாய்!
கானலாய் ஒரு காதல் கண்டேன் கண்ணைக் குருடாக்கினாய்!
காற்றினில் கிழியும் இலைகளுக்கெல்லாம்,
காற்றிடம் கோபம் கிடையாது!
உன்னிடம் கோபம் இங்கு நான் கொண்டால்,
எங்கு போவது? என்ன ஆவது?
என் வாழ்வும் தாழ்வும் உன்னைச் சேர்வது
(தேவதையை)

19.மூச்சிழந்த வேளையிலும் தொடரும்....இந்த தவம்!

படம் : அமர்க்களம்
இசை : பரத்வாஜ்
வரிகள் : வைரமுத்து
குரல் : S.P.பாலசுப்ரமணியம்&சுஜாதா
-------------------------------------------------------------------
பெ:
சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்
யுத்தம் இல்லாத உலகம் கேட்டேன்
ரத்தத்தில் என்றென்றும் வேகம் கேட்டேன்
ரகசியமில்லா உள்ளம் கேட்டேன்
ஆ:
சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்
யுத்தம் இல்லாத உலகம் கேட்டேன்
ரத்தத்தில் என்றென்றும் வேகம் கேட்டேன்
ரகசியமில்லா உள்ளம் கேட்டேன்
உயிரைக்கிள்ளாத உறவைக் கேட்டேன்
ஒற்றைக் கண்ணீர்த் துளியைக் கேட்டேன்
வலிகள் செய்யாத வார்த்தை கேட்டேன்
வயதுக்குச் சரியான வாழ்க்கை கேட்டேன்
இடிகள் இல்லாத மேகம் கேட்டேன்
இளமை கெடாத மோகம் கேட்டேன்
பறந்து பறந்து நேசம் கேட்டேன்
பாசாங்கில்லாத பாசம் கேட்டேன்
புல்லின் நுனியில் பனியைக் கேட்டேன்
பூவின் மடியில் படுக்கை கேட்டேன்
தானே உறங்கும் விழியைக் கேட்டேன்
தலையைக் கோதும் விரலைக் கேட்டேன்
நிலவில் நனையும் சோலை கேட்டேன்
நீலக் குயிலின் பாடல் கேட்டேன்
நடந்து போக நதிக்கரை கேட்டேன்
கிடந்து உருளப் புல்வெளி கேட்டேன்
தொட்டுப் படுக்க நிலவைக் கேட்டேன்
எட்டிப் பறிக்க விண்மீன் கேட்டேன்
துக்கம் மறந்த தூக்கம் கேட்டேன்
தூக்கம் மணக்கும் கனவைக் கேட்டேன்
பூமிக்கெல்லாம் ஒரு பகல் கேட்டேன்
பூவுக்கெல்லாம் ஆயுள் கேட்டேன்
மனிதர்க்கெல்லாம் ஒரு மனம் கேட்டேன்
பறவைக்கெல்லாம் தாய் மொழி கேட்டேன்
உலகுக்கெல்லாம் சம மழை கேட்டேன்
ஊருக்கெல்லாம் ஒரு நதி கேட்டேன்
வானம் முழுக்க நிலவைக் கேட்டேன்
வாழும்போதே சொர்க்கம் கேட்டேன்
எண்ணம் எல்லாம் உயரக் கேட்டேன்
எரியும் தீயாய்க் கவிதை கேட்டேன்
கண்ணீர் கடந்த ஞானம் கேட்டேன்
காமம் கடந்த யோகம் கேட்டேன்
சுற்றும் காற்றின் சுதந்திரம் கேட்டேன்
சிட்டுக் குருவியின் சிறகைக் கேட்டேன்
உச்சந்தலைமேல் மழையைக் கேட்டேன்
உள்ளங்காலில் நதியைக் கேட்டேன்
பண்கொண்ட பாடல் பயிலக் கேட்டேன்
பறவைக்கிருக்கும் வானம் கேட்டேன்
நன்றி கெடாத நட்பைக் கேட்டேன்
நடுங்கவிடாத செல்வம் கேட்டேன்
மலரில் ஒரு நாள் வசிக்கக் கேட்டேன்
மழையின் சங்கீதம் ருசிக்கக் கேட்டேன்
நிலவில் நதியில் குளிக்கக் கேட்டேன்
நினைவில் சந்தனம் மணக்கக் கேட்டேன்
விழுந்தால் நிழல் போல் விழவே கேட்டேன்
அழுதால் மழை போல் அழவே கேட்டேன்
ஏகாந்தம் என்னோடு வாழக் கேட்டேன்
எப்போதும் சிரிக்கின்ற உதடுகள் கேட்டேன்
பனித்துளி போல் ஒரு சூரியன் கேட்டேன்
சூரியன் போல் ஒரு பனித்துளி கேட்டேன்
ராஜராஜனின் வாளைக் கேட்டேன்
வள்ளுவன் எழுதிய கோலைக் கேட்டேன்
பாரதியாரின் சொல்லைக் கேட்டேன்
பார்த்திபன் தொடுத்த வில்லைக் கேட்டேன்
மாயக் கண்ணன் குழலைக் கேட்டேன்
மதுரை மீனாட்சி கிளியைக் கேட்டேன்
சொந்த உழைப்பில் சோற்றைக் கேட்டேன்
தொட்டுக் கொள்ள பாசம் கேட்டேன்
மழையைப் போன்ற தூய்மை கேட்டேன்
புல்லைப் போன்ற பணிவைக் கேட்டேன்
புயலைப் போன்ற துணிவைக் கேட்டேன்
இடியைத் தாங்கும் தோள்கள் கேட்டேன்
இழிவைத் தாங்கும் இதயம் கேட்டேன்
துரோகம் தாங்கும் வலிமை கேட்டேன்
தொலைந்துவிடாத பொறுமை கேட்டேன்
சொன்னது கேட்கும் உள்ளம் கேட்டேன்
சொன்னால் சாகும் தேகம் கேட்டேன்
கயவரை அறியும் கண்கள் கேட்டேன்
காலம் கடக்கும் கால்கள் கேட்டேன்
சின்னச் சின்னத் தோல்விகள் கேட்டேன்
சீக்கிரம் ஆறும் காயம் கேட்டேன்
மூடியில்லாத முகங்கள் கேட்டேன்
போலியில்லாத புன்னகை கேட்டேன்
தவழும் வயதில் தாய்ப்பால் கேட்டேன்
தாவும் வயதில் பொம்மைகள் கேட்டேன்
ஐந்து வயதில் புத்தகம் கேட்டேன்
ஆறாம் விரலாய்ப் பேனா கேட்டேன்
காசே வேண்டாம் கருணை கேட்டேன்
தலையணை வேண்டாம் தாய்மடி கேட்டேன்
கூட்டுக்கிளிபோல் வாழக் கேட்டேன்
குறைந்தபட்ச அன்பைக் கேட்டேன்
இத்தனை கேட்டும் கிடைக்கவில்லை
இதிலே எதுவும் நடக்கவில்லை
வாழ்வே வாழ்வே வேண்டாமென்று,
மரணம் மரணம் மரணம் கேட்டேன்....!

Tuesday, January 10, 2006

18.உயிருக்குள் உயிர் ஊற்றிப்போனவளே...!

படம் : நந்தா
இசை : யுவன் ஷங்கர் ராஜா
வரிகள் : பழனிபாரதி
குரல் : S.P.பாலசுப்ரமணியம் & மால்குடி சுபா
--------------------------------------------------------------
ஆ:
முன் பனியா? முதல் மழையா?
என் மனதில் ஏதோ விழுகிறதே..!
விழுகிறதே! உயிர் நனைகிறதே....!
புரியாத உறவில் நின்றேன்!
அறியாத சுகங்கள் கண்டேன்!
மாற்றம் தந்தவள் நீதானே!
(முன் பனியா)
பெ:
மனசில் எதையோ மறைக்கும் கிளியே!
மனசைத் திறந்து சொல்லடி வெளியே!
கரையைக் கடந்து நீ வந்தது எதுக்கு?
கண்ணுக்குள்ளே ஒரு ரகசியம் இருக்கு!
மனசைத் திறந்து சொல்லடி வெளியே.....!
ஆ:
என் இதயத்தை, என் இதயத்தை வழியில்
எங்கேயோ மறந்து தொலைத்து விட்டேன்!
உன் விழியினில், உன் விழியினில் அதனை,
இப்போது கண்டு பிடித்து விட்டேன்!
இதுவரை எனக்கில்லை முகவரிகள்!
அதை நான் கண்டேன் உன் புன்னகையில்..!
வாழ்கிறேன் நான் உன் மூச்சிலே.....!
(முன் பனியா)
பெ:
சலங்கை குலுங்க ஓடும் அலையே!
சங்கதி என்ன சொல்லடி வெளியே!
கரையில் வந்து நீ துள்ளுவது எதுக்கு?
நெலவ புடிச்சுக்க நெனைப்பது எதுக்கு?
ஏலோ ஏலோ! ஏலோ ஏலோ....!
ஆ:
என் பாதைகள், என் பாதைகள்
உனது வழி பார்த்து வந்து முடியுதடி!
என் இரவுகள், என் இரவுகள்
உனது முகம் பார்த்து விடிய ஏங்குதடி!
இரவையும் பகலையும் மாற்றிவிட்டாய்!
எனக்குள் உன்னை நீ ஊற்றி விட்டாய்!
மூழ்கினேன் நான் உன் கண்ணிலே...!
(முன் பனியா)

17.நாளைய நாட்டின் தலைவனும் நீயே!

படம் : உன்னால் முடியும் தம்பி
இசை : இளையராஜா
வரிகள் : புலமைப்பித்தன்
குரல் : S.P.பாலசுப்ரமணியம்
---------------------------------------------------------------
உன்னால் முடியும் தம்பி! தம்பி!
அட! உனக்குள் இருக்கும் உன்னை நம்பி!
தோளை உயர்த்து! தூங்கி விழும் நாட்டை எழுப்பு!
உன் தோளை உயர்த்து! தூங்கி விழும் நாட்டை எழுப்பு!
எதையும் முடிக்கும் இதயம் உன்னில் கண்டேன்!
(உன்னால்)
நாளைய நாட்டின் தலைவனும் நீயே!
நம்பிக்கை கொண்டு வருவாயே!
உனக்கெனவோர் சரித்திரமே எழுதும் காலம் உண்டு!
(உன்னால்)
ஆகாய கங்கை காய்ந்தாலும் காயும்,
சாராய கங்கை காயாதடா!
ஆள்வோர்கள் போடும் சட்டங்கள் யாவும்,
காசுள்ள பக்கம் பாயாதடா!
குடிச்சவன் போதையில் நிப்பான்!
குடும்பத்தை வீதியில் வைப்பான்!
தடுப்பது யாரென்று கொஞ்சம் நீ கேளடா!
கள்ளுக்கடை காசிலே தாண்டா,
கட்சிக் கொடி ஏறுதுபோடா!
மண்ணோடு போகாமல் நம் நாடு திருந்தச் செய்யோணும்!
(உன்னால்)
கல்லூரி பள்ளி இல்லாத ஊரை,
கையோடு இன்றே தீ மூட்டுவோம்!
கல்லாத பேர்கள் இல்லாத நாடு,
நம் நாடு என்றே நாம் மாற்றுவோம்!
இருக்கிற கோவிலை எல்லாம்,
படிக்கிற பள்ளிகள் செய்வோம்!
அறிவெனும் கோபுரம் அங்கே நாம் காணுவோம்!
வானம் உங்கள் கைகளில் உண்டு!
ஞானம் உங்கள் நெஞ்சினில் உண்டு!
நான் என்று எண்ணாமல் நாம் என்ற உணர்வு கொள்ளணும்
(உன்னால்)

16.துரோகத்தைப் "போகி"யில் பொசுக்குகிறது நட்பு...!

படம் : தளபதி
இசை : இளையராஜா
வரிகள் : வாலி
குரல் : S.P.பாலசுப்ரமணியம், K.J.ஜேசுதாஸ் & குழு
------------------------------------------------------------------------
காட்டுக் குயிலு மனசுக்குள்ளே,
பாட்டுக்கென்றும் பஞ்சமில்லை! பாடத்தான்!
தவிலைத் தட்டு துள்ளிக்கிட்டு!
கவலை விட்டு கச்சைக்கட்டு! ஆடத்தான்!
(காட்டு)
குழு:
எல்லோரும் மொத்தத்திலே! சந்தோஷம் வெப்பத்திலே!
தள்ளாடும் நேரத்திலே! உல்லாசம் நெஞ்சத்திலே!
(காட்டு)
SPB :
போடா எல்லாம் விட்டுத் தள்ளு!
பழசை எல்லாம் சுட்டுத் தள்ளு!
புதுசா இப்போ பொறந்தோ முன்னு எண்ணிக் கொள்ளடா டோய்!
KJJ:
பயணம் எங்கே போனால் என்ன?
பாதை நூறு ஆனால் என்ன?
தோட்டம் வச்சவன் தண்ணீர் விடுவான்! சும்மா நில்லடா டோய்!
SPB :
ஊதக்காத்து வீச, உடம்புக்குள்ள கூச,
குப்பக்கூளம் பத்த வச்சுக் காயலாம்
KJJ:
தை பொறக்கும் நாளை... விடியும் நல்ல வேளை
பொங்க பாலு வெள்ளம் போல பாயலாம்
SPB&KJJ:
அச்சு வெல்லம், பச்சரிசி, வெட்டி வச்ச செங்கரும்பு,
அத்தனையும் தித்திக்கிற நாள் தான்..! ஹோய்!
(காட்டு)
SPB :
பந்தம் என்ன? சொந்தம் என்ன?
போனா என்ன? வந்தா என்ன?
உறவுக்கெல்லாம் கவலைப்பட்ட ஜென்மம் நானில்லே!
KJJ:
பாசம் வைக்க, நேசம் வைக்க,
தோழன் உண்டு, வாழவைக்க...!
அவனைத் தவிர உறவுக்காரன் யாரும் இங்கில்லே!
SPB :
உள்ள மட்டும் நானே, உசிரக் கூடத்தானே,
KJJ:
என் நண்பன் கேட்டா வாங்கிக்கன்னு சொல்லுவேன்
SPB :
என் நண்பன் போட்ட சோறு, தினமும் தின்னேன் பாரு!
KJJ:
நட்பைக் கூடக் கற்பை போல எண்ணுவேன்
SPB&KJJ:
சோகம் விட்டு, சொர்க்கம் தொட்டு, ராகமிட்டு, தாளமிட்டு,
பாட்டுப்பாடும் வானம்படி நாம் தான்..!
(காட்டு)

Monday, January 09, 2006

15.நூறு வருஷம் நிலைப்பதில்லை

படம் : மௌனம் பேசியதே
இசை : யுவன் ஷங்கர் ராஜா
வரிகள் : சினேகன்
குரல் : கார்த்திக்
---------------------------------------------------------------
ஆடாத ஆட்டமெல்லாம் போட்டவங்க மண்ணுக்குள்ள
போன கதை உனக்குத் தெரியுமா?
நீ கொண்டு வந்ததென்ன? நீ கொண்டு போவதென்ன?
உண்மை என்ன உனக்கு புரியுமா?
வாழ்க்கை இங்கே யாருக்கும் சொந்தமில்லையே!
வந்தவனும் வருபவனும் நிலைப்பதில்லையே!
ஏ!... நீயும் நானும் நூறு வருஷம் இருப்பதில்ல பாரு!
(ஆடாத)
நித்தம் கோடி சுகங்கள் தேடி,
கண்கள் மூடி அலைகின்றோம்!
பாவங்களை மேலும் மேலும்,
சேர்த்துக் கொண்டே போகின்றோம்!
மனிதன் என்னும் வேடம் போட்டு,
மிருகமாக வாழ்கின்றோம்!
தீர்ப்பு ஒன்று இருப்பதை மறந்து,
தீமைகளைச் செய்கின்றோம்!
காலம் மீண்டும் திரும்பாதே! பாதை மாறிப் போகாதே!
பூமி கொஞ்சம் குலுங்கினாலே நின்று போகும் ஆட்டமே!
(ஆடாத)
ஹே! கருவறைக்குள் தானாகக்
கற்றுக் கொண்ட சிறு ஆட்டம்!
தொட்டிலுக்குள் சுகமாகத் தொடரும் ஆட்டமே!
பருவம் பூக்கும் நேரத்தில்
காதல் செய்யப் போராட்டம்!
காதல் வந்த பின்னாலே போதை ஆட்டமே!
பேருக்காக ஒரு ஆட்டம்!
காசுக்காகப் பல ஆட்டம்!
எட்டுக்காலில் போகும் போது ஊரு போடும் ஆட்டமே
(ஆடாத)

Thursday, January 05, 2006

14.வாசல்கள் வேறு..! வழி ஒன்றுதான்!

படம் : மறுபடியும்
இசை : இளையராஜா
வரிகள் : வாலி
குரல் : S.P.பாலசுப்ரமணியம்
--------------------------------------------------------------
நலம் வாழ எந்நாளும் வாழ்த்துக்கள்!
தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள்!
இளவேனில் உன்வாசல் வந்தாடும்!
இளந் தென்றல் உன்மீது பண்பாடும்!
(நலம் வாழ)
மனிதர்கள் சிலநேரம் நிறம் மாறலாம்!
மனங்களும் அவர் குணங்களும் தடம் மாறலாம்!
இலக்கணம் சில நேரம் பிழையாகலாம்!
எழுதிய அன்பு இலக்கியம் தவறாகலாம்!
விரல்களைத் தாண்டி வளர்ந்ததைக் கண்டு,
நகங்களை நாமும் நறுக்குவதுண்டு!
இதிலென்ன பாவம்? எதற்கிந்த சோகம்? கிளியே..!
(நலம் வாழ)
கிழக்கினில் தினம்தோன்றும் கதிரானது,
மறைவதும் பின்பு உதிப்பதும் மரபானது!
கடல்களில் உருவாகும் அலையானது,
விழுவதும் பின்பு எழுவதும் இயல்பானது!
நிலவினை நம்பி இரவுகள் இல்லை!
விளக்குகள் காட்டும் வெளிச்சத்தின் எல்லை!
ஒரு வாசல் மூடி....,மறுவாசல் வைப்பான், இறைவன்...!
(நலம் வாழ)

13.நிறைய "அர்த்த"ங்களோடு...ஒரு கொண்டாட்டம்

படம் : திருடா திருடா
இசை : A.R.ரஹ்மான்
வரிகள் : வைரமுத்து
குரல் : மனோ & குழு
--------------------------------------------------------------
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்,
காதல் என்று அர்த்தம்!
கடலை வானம் கொள்ளையடித்தால்,
மேகம் என்று அர்த்தம்!
பூவை வண்டு கொள்ளையடித்தால்,
புதையல் என்று அர்த்தம்!
புதையல் என்னைக் கொள்ளையடித்தால்,
மச்சம் என்றே அர்த்தம்!அர்த்தம்!
(கண்ணும்)
பறவைகள் தோன்றினால்,
வானில் பெளர்ணமி என்று அர்த்தம்!
பாற்கடல் பொங்கினால்,
நதிகள்பக்கம் என்று அர்த்தம்!
ஆளில்லாமல் அடிக்கடி சிரித்தால்,
லூசு என்று அர்த்தம்!
அழகுப் பெண்ணின் தாயார் என்றால்,
அத்தை என்றே அர்த்தம்!அர்த்தம்!
(கண்ணும்)
தாவிடும் ஓடைகள்,
நதியின் தங்கைகள் என்று அர்த்தம்!
தூறிடும் தூறல்கள்,
மழையின் தோழிகள் என்று அர்த்தம்!
இரவின் மீது வெள்ளையடித்தால்,
விடியல் என்று அர்த்தம்!
எதிரி பேரைச் சொல்லியடித்தால்,
வெற்றி என்றே அர்த்தம்!அர்த்தம்!
(கண்ணும்)

12.வாழ்வின் பொருள்......என்ன?

படம் : அவள் ஒரு தொடர்கதை
இசை : M.S.விஸ்வனாதன்
வரிகள் : கண்ணதாசன்
குரல் : K.J.ஜேசுதாஸ்
---------------------------------------------------------------
தெய்வம் தந்த வீடு வீதியிருக்கு!
இந்த ஊரென்ன? சொந்த வீடென்ன?
ஞானப் பெண்ணே?வாழ்வின் பொருளென்ன?
நீ வந்த கதை என்ன?
(தெய்வம்)
நான் கேட்டுத் தாய்தந்தை படைத்தாரா? இல்லை
என் பிள்ளை எனைக் கேட்டுப் பிறந்தானா?
தெய்வம் செய்த பாவம் இது போடி தங்கச்சி!
கொன்றால் பாவம் தின்றால் போச்சு இதுதான் என் கட்சி!
ஆதி வீடு அந்தம் காடு!
இதில் நான் என்ன? அடியே! நீ என்ன? ஞானப் பெண்ணே!
வாழ்வின் பொருளென்ன? நீ வந்த கதை என்ன?
(தெய்வம்)
வெறும் கோவில் இதிலென்ன அபிஷேகம்?உன்
மனம் எங்கும் தெருக்கூத்து பகல் வேஷம்!
கள்ளிக்கென்ன முள்ளில் வேலி போடி தங்கச்சி!
காற்றுக்கேது தோட்டக்காரன் இதுதான் என் கட்சி!
கொண்டதென்ன கொடுப்பதென்ன?
இதில் தாய் என்ன? மணந்த தாரம் என்ன? ஞானப் பெண்ணே!
வாழ்வின் பொருளென்ன? நீ வந்த கதை என்ன?
(தெய்வம்)
தெளிவாகத் தெரிந்தாலே சித்தாந்தம்!
அது தெரியாமல் போனாலே வேதாந்தம்!
மண்ணைத் தோண்டித் தண்ணீர் தேடும் அன்புத் தங்கச்சி!
என்னை தோண்டி ஞானம் கண்டேன் இதுதான் என் கட்சி!
உண்மை என்ன பொய்மை என்ன?
இதில் தேன் என்ன? கடிக்கும் தேள் என்ன? ஞானப் பெண்ணே!
வாழ்வின் பொருளென்ன? நீ வந்த கதை என்ன?
(தெய்வம்)

Wednesday, January 04, 2006

11.மாலையில் உதயமாகிறான் கவிஞன்

படம் : நிழல்கள்
இசை : இளையராஜா
வரிகள் : வைரமுத்து
குரல் : S.P.பாலசுப்ரமணியம்
---------------------------------------------------------------
பொன்மாலைப் பொழுது!
இது ஒரு பொன்மாலைப் பொழுது!
வானமகள் நாணுகிறாள், வேறு உடை பூணுகிறாள்!
(இது ஒரு)
ஆயிரம் நிறங்கள் ஜாலமிடும்!
ராத்திரி வாசலில் கோலமிடும்!
வானம் இரவுக்குப் பாலமிடும்!
பாடும் பறவைகள் தாளமிடும்!
பூமரங்கள் சாமரங்கள் வீசாதோ
(இது ஒரு)
வானம் எனக்கொரு போதி மரம்!
நாளும் எனக்கது சேதி தரும்!
ஒரு நாள் உலகம் நீதி பெறும்!
திருநாள் நிகழும் தேதி வரும்!
கேள்விகளால் வேள்விகளை நான் செய்வேன்!
(இது ஒரு)

10.அந்தி நேரத்துத் தாலாட்டு....!

படம் : மூன்றாம் பிறை
இசை : இளையராஜா
வரிகள் : கண்ணதாசன்
குரல் : K.J.ஜேசுதாஸ்
---------------------------------------------------
கண்ணே கலைமானே!
கன்னி மயிலெனக் கண்டேன் உனை நானே!
அந்திப் பகல் உன்னை நான் பார்க்கிறேன்.
ஆண்டவனை இதைத்தான் கேட்கிறேன்.
ஆரிராரோ! ஓராரிரோ!ஆரிராரோ! ஓராரிரோ!
(கண்ணே)
ஊமை என்றால் ஒரு வகை அமைதி!
ஏழை என்றால் அதிலொரு அமைதி!
நீயோ கிளிப்பேடு! பண் பாடும் ஆனந்தக் குயில்பேடு!
ஏனோ தெய்வம் சதி செய்தது, பேதை போல விதி செய்தது!
(கண்ணே)
காதல் கொண்டேன், கனவினை வளர்த்தேன்!
கண்மணி உனை நான் கருத்தினில் நிறைத்தேன்!
உனக்கே உயிரானேன், எந்நாளும் எனை நீ மறவாதே!
நீயில்லாமல் எது நிம்மதி? நீதான் என்றும் என் சந்நிதி!
(கண்ணே)

Tuesday, January 03, 2006

9.தாயின் பாதம் பணிந்து....

படம் : மன்னன்
இசை : இளையராஜா
வரிகள் : வாலி
குரல் : K.J.ஜேசுதாஸ்
-------------------------------------------------------------
அம்மா என்றழைக்காத உயிரில்லையே
அம்மாவை வணங்காது உயர்வில்லையே
நேரில் நின்று பேசும் தெய்வம்
பெற்ற தாயன்றி வேறொன்று ஏது
(அம்மா)
அபிராமி சிவகாமி கருமாயி மகமாயி
திருக்கோயில் தெய்வங்கள் நீதானம்மா!
அன்னைக்கு அன்றாடம் அபிஷேகம் அலங்காரம்
புரிகின்ற சிறு தொண்டன் நாந்தானம்மா!
பொருளோடு புகழ் வேண்டும் மகனல்ல தாயே உன்
அருள் வேண்டும் எனக்கென்றும் அது போதுமே!
அடுத்திங்கு பிறப்பொன்று அமைந்தாலும் நான் உந்தன்
மகனாகப் பிறக்கின்ற வரம் வேண்டுமே!
அதை நீயே தருவாயே....!
(அம்மா)
பசும் தங்கம் புது வெள்ளி மாணிக்கம் மணிவைரம்
இவை யாவும் ஒரு தாய்க்கு ஈடாகுமா?
விலை மீது விலை வைத்துக் கேட்டாலும் கொடுத்தாலும்
கடை தன்னில் தாயன்பு கிடைக்காதம்மா!
ஈரைந்து மாதங்கள் கருவோடு எனைத்தாங்கி
நீ பட்ட பெரும் பாடு அறிவேனம்மா!
ஈரேழு ஜென்மங்கள் எடுத்தாலும் உழைத்தாலும்
உனக்கிங்கு நான் பட்ட கடன் தீருமா?
உன்னாலே பிறந்தேனே...!
(அம்மா)

8.காலடியில் தொலைந்த காதல்(அன்)

படம் : காதலன்
இசை : A.R.ரஹ்மான்
வரிகள் : வைரமுத்து
குரல் : உன்னி கிருஷ்ணன்
----------------------------------------------------------
என்னவளே! அடி என்னவளே!
எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன்.
எந்த இடம், அது தொலைந்த இடம்,
அந்த இடத்தையும் மறந்து விட்டேன்!
உந்தன் கால்கொலுசில் அது தொலைந்ததென்று,
உந்தன் காலடி தேடி வந்தேன்.
காதலென்றால் பெரும் அவஸ்தையென்று,
உனைக் கண்டதும் கண்டு கொண்டேன்.
இன்று கழுத்து வரை எந்தன் காதல் வந்து,
இரு கண்விழி பிதுங்கி நின்றேன்.
(என்னவளே)
வாய்மொழியும் எந்தன் தாய்மொழியும்
இன்று வசப்படவில்லையடி!
வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமில்லாதொரு
உருண்டயும் உருளுதடி!
காத்திருந்தால் எதிர்பார்த்திருந்தால்
ஒரு நிமிஷமும் வருஷமடி!
கண்களெல்லாம் எனைப் பார்ப்பதுபோல்
ஒரு கலக்கமும் தோன்றுதடி!
இது சொர்க்கமா நரகமா சொல்லடி உள்ளபடி.
நான் வாழ்வதும் விடைகொண்டு போவதும்
உந்தன் வார்த்தையில் உள்ளதடி!
(என்னவளே)
கோகிலமே நீ குரல் கொடுத்தால்
உனைக் கும்பிட்டுக் கண்ணடிப்பேன்.
கோபுரமே உனைச் சாய்த்துக்கொண்டு
உந்தன் கூந்தலில் மீன் பிடிப்பேன்.
வெண்ணிலவே உனைத் தூங்கவைக்க
உந்தன் விரலுக்கு சொடுக்கெடுப்பேன்.
வருடவரும் பூங்காற்றையெல்லாம்
கொஞ்சம் வடிகட்டி அனுப்பிவைப்பேன்.
என் காதலின் தேவயை காதுக்குள் ஓதிவைப்பேன்.
உன் காலடி எழுதிய கோலங்கள்
புதுக் கவிதைகள் என்றுரைப்பேன்....!
(என்னவளே)

7.அழகான மனைவி...அன்பான துணைவி!

படம் : புதுப்புது அர்த்தங்கள்
இசை : இளையராஜா
வரிகள் : வாலி
குரல் : S.P.பாலசுப்ரமணியம்
------------------------------------------------------------
கல்யாணமாலை கொண்டாடும் பெண்ணே!
என் பாட்டைக் கேளு உண்மைகள் சொன்னேன்!
சுதியோடு லயம் போலவே,
இணையாகும் துணையாகும் சம்சார சங்கீதமே!
(கல்யாணமாலை)
வாலிபங்கள் ஓடும், வயதாகக்கூடும்,
ஆனாலும் அன்பு மாறாதது!
மாலையிடும் சொந்தம், முடிபோட்ட பந்தம்,
பிரிவென்னும் சொல்லே அறியாதது!
அழகான மனைவி, அன்பான துணைவி
அமைந்தாலே பேரின்பமே!
மடிமீது துயில சரசங்கள் பயில
மோகங்கள் ஆரம்பமே!
நல்ல மனையாளின் நேசம் ஒரு கோடி!
நெஞ்சம் எனும் வீணை பாடுமே தோடி!
சந்தோஷ சாம்ராஜ்யமே!

(கல்யாணமாலை)
கூவுகின்ற குயிலைக் கூட்டுக்குள் வைத்து,
பாடென்று சொன்னால் பாடாதம்மா!
தோகை மயில் தன்னைச் சிறை வைத்துப் பூட்டி,
ஆடென்று சொன்னால் ஆடாதம்மா!
நாள்தோறும் ரசிகன், பாராட்டும் கலைஞன்,
காவல்கள் எனக்கில்லையே!
சோகங்கள் எனக்கும், நெஞ்சோடு இருக்கும்,
சிரிக்காத நாளில்லையே!
துக்கம் சில நேரம் பொங்கி வரும்போதும்
மக்கள் மனம் போலே பாடுவேன் கண்ணே!
என் சோகம் என்னோடுதான்!
(கல்யாணமாலை)

6.காதலில் கருகும் இரு உயிர்ப்பூக்கள்

படம் : ரோஜா
இசை : A.R.ரஹ்மான்
வரிகள் : வைரமுத்து
குரல் : உன்னிமேனன் & சுஜாதா
--------------------------------------------------------------------------
பெ
புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது
இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது
இங்கு சொல்லாத இடம் கூடக் குளிர்கின்றது
மனம் சூடான இதம் தேடி அலைகின்றது

(புது வெள்ளை)
பெ
நதியே நீயானால் கடல் நானே!
சிறு பறவை நீயானால் உன் வானம் நானே!
(புது வெள்ளை)

பெண் இல்லாத ஊரிலே அடி ஆண் பூகேட்பதில்லை
பெ
பெண் இல்லாத ஊரிலே கொடிதான் பூப்பூப்பதில்லை

உன் புடவை முந்தானை சாய்ந்ததில் இந்த பூமி பூப்பூத்தது
பெ
இது கம்பன் பாடாத சிந்தனை உந்தன் காதோடு யார் சொன்னது?
(புது வெள்ளை)
பெ
நீ அணைக்கின்ற வேளையில் உயிர்ப் பூ திடுக்கென்று மலரும்

நீ வெடுக்கென்று ஓடினால் உயிர்ப் பூ சருகாக உலரும்
பெ
இரு கைகள் தீண்டாத பெண்மையை உன் கண்கள் பந்தாடுதோ!

மலர் மஞ்சம் சேராத பெண்ணிலா எந்தன் மார்போடு வந்தாடுதோ!
(புது வெள்ளை)

5.மதுக்கோப்பையில் வழிகிறது கங்கை

படம் : புன்னகை மன்னன்
இசை : இளையராஜா
வரிகள் : வைரமுத்து
குரல் : S.P.பாலசுப்ரமணியம்
-----------------------------------------------------------------------
என்ன சத்தம் இந்த நேரம்? குயிலின் ஒலியாய்,
என்ன சத்தம் இந்த நேரம்? நதியின் ஒலியாய்,
கிளிகள் முத்தம் தருதா? அதனால் சத்தம் வருதா?அடடா!

(என்ன)
கன்னத்தில் முத்தத்தின் ஈரம் அது காயவில்லையே!
கண்களில் ஏனந்தக் கண்ணீர் அது யாராலே?
கன்னியின் கழுத்தைப் பார்த்தால் மணமாகவில்லையே!
காதலன் மடியில் பூத்தாள் ஒரு பூ போலே!
மன்னவனே உன் விழியால் வேல் விழியை மூடு!

ஆதரவாய்ச் சாய்ந்துவிட்டாள், 'ஆரிரரோ' பாடு!
ஆரிரரோ! இவர் யார் எவரோ? பதில் சொல்வார் யாரோ?
(என்ன)
கூந்தலில் நுழைந்த கைகள், ஒரு கோலம் போடுதோ?
தன்னிலை மறந்த பெண்மை அதைத் தாங்காதோ!
உதட்டில் துடிக்கும் வார்த்தை, அது உலர்ந்து போனதோ?
உள்ளங்கள் துடிக்கும் ஓசை, இசை ஆகாதோ?
மங்கையிவள் வாய் திறந்தால் மல்லிகைப்பூ வாசம்,
ஓடையெல்லாம் பெண் பெயரை உச்சரித்தே பேசும்!
யார் இவர்கள்? இரு பூங்குயில்கள்! இளங்காதல் மான்கள்!
(என்ன)

Monday, January 02, 2006

4.அவளாய் ஆன அவன்...!

படம்: காதல்
இசை:ஜோஷ்வா ஸ்ரீதர்

வரிகள்:நா.முத்துக்குமார்
குரல்: ஹரி சரண்

--------------------------------------------------------
உனக்கென இருப்பேன்.
உயிரையும் கொடுப்பேன்.
உன்னை நான் பிரிந்தால்,
உனக்கு முன் இறப்பேன்.
கண்மணியே, கண்மணியே,
அழுவதேன்? கண்மணியே!
வழித்துணை நான் இருக்க...
(உனக்கென இருப்பேன்)
கண்ணீர் துளிகளைக், கண்கள் தாங்கும் - கண்மணி
காதலின் நெஞ்சம்தான் தாங்கிடுமா?
கல்லறை மீதுதான் பூத்த பூக்கள் - என்றுதான்

வண்ணத்துப்பூச்சிகள் பார்த்திடுமா?
மின்சாரக் கம்பிகள் மீதும்,

மைனாக்கள் கூடு கட்டும்,
நம் காதல் தடைகளைத் தாண்டும்.
வளையாமல் நதிகள் இல்லை,

வலிக்காமல் வாழ்க்கை இல்லை,
வரும் காலம் காயம் ஆற்றும்.
நிலவொளியை மட்டும் நம்பி, இலையென்ன வாழ்வது?,
மின்மினியும் ஒளி கொடுக்கும்!
(உனக்கென இருப்பேன்)
தந்தையும் தாயையும் தாண்டி வந்தாய் - தோழியே,
இரண்டுமாய் என்றுமே நானிருப்பேன்.
தோளிலே நீயுமே சாயும்போது - எதிர்வரும்

துயரங்கள் அனைத்தையும் நான் எதிர்ப்பேன்.
வெந்நீரில் நீர் குளிக்க,

விறகாகித் தீக் குளிப்பேன்,
உதிரத்தில் உன்னைக் கலப்பேன்.
விழிமூடும்போதும் உன்னை,

பிரியாமல் நான் இருப்பேன்,
கனவுக்குள் காவல் இருப்பேன்.
நான் என்றால் நானேயில்லை, நீதானே நானாய் ஆனேன்.
நீ அழுதால் நான் துடிப்பேன்.
(உனக்கென இருப்பேன்)

3.சங்கீதமே சந்நிதி!

படம் : சிகரம்
இசை : S.P.பாலசுப்ரமணியம்
வரிகள் : வைரமுத்து
குரல் : K.J.ஜேசுதாஸ்
----------------------------------------------------------
அகரம் இப்போ சிகரம் ஆச்சு!
தகரம் இப்போ தங்கம் ஆச்சு!
காட்டு மூங்கில், பாட்டுப் பாடும்,
புல்லாங்குழல் ஆச்சு!
சங்கீதமே சந்நிதி....
சந்தோஷம் சொல்லும் சங்கதி!
(சங்கீதமே)
(அகரம்)
கார்காலம் வந்தால் என்ன?
கடும் கோடை வந்தால் என்ன?
மழை வெள்ளம் போகும், கரை ரெண்டும் வாழும்.
காலங்கள் போனால் என்ன?
கோலங்கள் போனால் என்ன?
பொய்யன்பு போகும், மெய்யன்பு வாழும்.
அன்புக்கு உருவமில்லை!
பாசத்தில் பருவமில்லை!
வானோடு முடிவுமில்லை!
வாழ்வோடு விடையுமில்லை!
இன்றென்பது உண்மையே.....
நம்பிக்கை உங்கள் கையிலே!

(அகரம்)
தண்ணீரில் மீன்கள் வாழும்.
கண்ணீரில் காதல் வாழும்.
ஊடல்கள் எல்லாம் தேடல்கள்தானே!
பசியாற பார்வைபோதும்!
பரிமாற வார்த்தை போதும்!
கண்ணீரில் பாதி காயங்கள் ஆறும்!
தலைசாய்க்க இடமாயில்லை!
தலை கோத விரலாயில்லை!
இளங்காற்று வரவாயில்லை!
இளைப்பாறு பரவாயில்லை!
நம்பிக்கையே நல்லது.....
எறும்புக்கும் வாழ்க்கை உள்ளது!

(அகரம்)

2.பூபாளம் கூடாதென்னும் வானம்... அவள்!

படம் : மெளனராகம்
இசை : இளையராஜா
வரிகள் : வாலி
குரல் : S.P.பாலசுப்ரமணியம்
---------------------------------------------------------------------
மன்றம் வந்த தென்றலுக்கு,
மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ?
அன்பே! என் அன்பே!
தொட்டவுடன் சுட்டதென்ன
கட்டழகு வட்ட நிலவோ?
கண்ணே! என் கண்ணே!
பூபாளமே... கூடாதென்னும் வானம் உண்டோ சொல்

(மன்றம்)
தாமரை மேலே, நீர்த்துளி போல்
தலைவனும் தலைவியும் வாழ்வதென்ன?
நண்பர்கள் போலே வாழ்வதற்கு
மாலையும் மேளமும் தேவையென்ன?
சொந்தங்களே இல்லாமல், பந்தபாசம் கொள்ளாமல்
பூவே உன் வாழ்க்கைதான் என்ன... சொல்!
(மன்றம்)
மேடையைப் போலே வாழ்க்கை அல்ல,
நாடகம் ஆனதும் விலகிச் செல்ல!
ஓடையைப் போலே உறவும் அல்ல,

பாதைகள் மாறியே பயணம் செல்ல!
விண்ணோடு தான் உலாவும், வெள்ளி வண்ண நிலாவும்
என்னோடு நீ வந்தால் என்ன..? வா!

(மன்றம்)

Sunday, January 01, 2006

1.உயிரின் வேர் கிள்ளும் ஒரு காதல்

படம் : உயிரே
இசை : A.R.ரஹ்மான்
வரிகள் : வைரமுத்து
குரல் : உன்னி மேனன் & சுவர்ணலதா

-------------------------------------------------------------------
பெ:
ஓ!
கண்ணில் ஒரு வலியிருந்தால், கனவுகள் வருவதில்லை
கண்ணில் ஒரு வலியிருந்தால்... கனவுகள் வருவதில்லை
கண்ணில் ஒரு வலியிருந்தால்... கனவுகள் வருவதில்லை

ஆ:
பூங்காற்றிலே, உன் சுவாசத்தை,
தனியாகத் தேடிப் பார்த்தேன்.
கடல் மேல் ஒரு துளி வீழ்ந்ததே,

அதைத் தேடித் தேடிப் பார்த்தேன்.
உயிரின் துளி காயும் முன்னே,
என் விழி உனை காணும் கண்ணே!
என் ஜீவன் ஓயும் முன்னே ஓடோடி வா!
(பூங்காற்றிலே)
ஆ:
காற்றின் அலை வரிசை கேட்கின்றதா?
கேட்கும் பாட்டில் ஒரு உயிர் விடும்

கண்ணீர் வழிகின்றதா? நெஞ்சு நனைகின்றதா?
இதயம் கருகும் ஒரு வாசம் வருகிறதா?
காற்றில் கண்ணீரை ஏற்றி,
கவிதைச் செந்தேனை ஊற்றி,
கண்ணே உன் வாசல் சேர்த்தேன்.
ஓயும் ஜீவன் ஒடும் முன்னே ஓடோடி வா!
(பூங்காற்றிலே)
பெ:
கண்ணில் ஒரு வலியிருந்தால்...கனவுகள் வருவதில்லை
கண்ணில் ஒரு வலியிருந்தால்... கனவுகள் வருவதில்லை

ஆ:
வானம் எங்கும் உன் பிம்பம் - ஆனால்
கையில் சேரவில்லை - காற்றில்
எங்கும் உன் வாசம் - வெறும்
வாசம் வாழ்க்கையில்லை!
உயிரை வேரோடு கிள்ளி,
என்னைச் செந்தீயில் தள்ளி,
எங்கே சென்றாயோ கள்ளி,
ஓயும் ஜீவன் ஓடும் முன்னே ஓடோடி வா!
(பூங்காற்றிலே)