Wednesday, May 17, 2006

95. மனம் ஏங்குதே!

90 களில் மிகப்பிரபலமாக இருந்த ஒரு பாடல்! ஹரிணியின் குரல் பனியை உருக்கி ஊற்றியது போன்ற ஒரு இதத்தைக் கொடுக்கிறது. வைரமுத்துவின் வரிகளும் அருமை! பிடித்த வரிகள்,
"புயல் வந்து போனதொரு வனமாய் ஆனதடா என்னுள்ளம்!"
"மலைநாட்டுக் கரும்பாறை மேலே,
தலை காட்டும் சிறு பூவைப்போலே,
பொல்லாத இளங்காதல் பூத்ததடா!"
--------------------------------------------------
படம் : நேருக்கு நேர்
இசை : தேவா
வரிகள் : வைரமுத்து
குரல் : ஹரிணி
--------------------------------------------------
மனம் விரும்புதே உன்னை... உன்னை!
உறங்காமலே கண்ணும் கண்ணும் சண்டை போடுதே!
நினைத்தாலே சுகம்தானடா!
நெஞ்சில் உன் முகம்தானடா!
அய்யய்யோ மறந்தேனடா!
உன் பேரே தெரியாதடா!
(மனம்)
அடடா நீ ஒரு பார்வை பார்த்தாய்!
அழகாய்த்தான் ஒரு புன்னகை பூத்தாய்!
அடிநெஞ்சில் ஒரு மின்னல் வெட்டியது!
அதிலே என் மனம் தெளியும் முன்னே,
அன்பே உந்தன் அழகு முகத்தை,
யார் வந்தென் இளமார்பில் ஒட்டியது?
புயல் வந்து போனதொரு வனமாய்
ஆனதடா என்னுள்ளம்!
என் நெஞ்சில் உனது கரம் வைத்தால்
என் நிலைமை அது சொல்லும்!
மனம் ஏங்குதே... மனம் ஏங்குதே....

மீண்டும் காண.... மனம் ஏங்குதே...!
(நினைத்தாலே)
மழையோடு நான் கரைந்ததுமில்லை!
வெயிலோடு நான் உருகியதில்லை!
பாறை போல் என்னுள்ளம் இருந்ததடா!
மலைநாட்டுக் கரும்பாறை மேலே,
தலை காட்டும் சிறு பூவைப்போலே,
பொல்லாத இளங்காதல் பூத்ததடா!
சட்டென்று சலனம் வருமென்று,
ஜாதகத்தில் சொல்லலையே...!
நெஞ்சோடு காதல் வருமென்று,
நேற்றுவரை நம்பலையே!
என் காதலா...! என் காதலா.....!

நீ வா! நீ வா! என் காதலா...!
(நினைத்தாலே)

Thursday, May 11, 2006

94. கண்ணாளனே!

தனிமையில் அமர்ந்து ரசிக்கக்கூடிய பாடல்களில் ஒன்று இது! காதல் விதை விழுந்த ஒரு பெண் மனதின் உணர்வுகளை அழகாக எழுதி இருப்பார் வைரமுத்து. என் விருப்பப்பாடகி சித்ராவின் பாடல்களில் நான் மிகவும் ரசிக்கும் ஒரு பாடல் இது....!
--------------------------------------------------------------------
படம் : பம்பாய்
இசை : A.R.ரஹ்மான்
வரிகள் : வைரமுத்து
குரல் : சித்ரா & குழு
---------------------------------------------------------------------
கு:
குமுசுமு குமுசுமு குப்புச்சுப்! குமுசுமு குப்புச்சுப்!
குமுசுமு குமுசுமு குப்புச்சுப்! குமுசுமு குப்புச்சுப்!
சல சல சல சல சோலைக்கிளியே! ஜோடியைத் தேடிக்கோ!
சிலு சிலு சிலு சிலு சக்கரை நிலவே! மாலையை மாத்திக்கோ!
மாமன்காரன் ராத்திரி வந்தா மடியில கட்டிக்கோ!
மாமன் சொன்ன சங்கதி எல்லாம் மனசில வச்சிக்கோ!
மாமன்காரன் ராத்திரி வந்தா மடியில கட்டிக்கோ!
மாமன் சொன்ன சங்கதி எல்லாம் மனசில வச்சிக்கோ!
சி:
கண்ணாளனே எனது கண்ணை நேற்றோடு காணவில்லை!
என் கண்களைப் பறித்துக்கொண்டு ஏனின்னும் பேசவில்லை?
ஆளான ஒரு சேதி அறியாமலே....
அலைபாயும் சிறு பேதை நானோ?
உன் பேரும் என் பேரும் தெரியாமலே...
உள்ளங்கள் இடம் மாறும் ஏனோ?
வாய் பேசவே வாய்ப்பில்லையே,
வலி தீர வழி என்னவோ...?
(கண்ணாளனே)
உந்தன் கண்ஜாடை விழுந்ததில் நெஞ்சம், நெஞ்சம்
தறிகெட்டுத் தளும்புது நெஞ்சம்!
எந்தன் மேலாடை பறந்ததில் கொஞ்சம், கொஞ்சம்
பிறை முகம் பார்த்தது கொஞ்சம்!
ரத்தம் கொதிகொதிக்கும்
உலை கொதித்திடும் நீர்க்குமிழ் போல...!
சித்தம் துடிதுடிக்கும்
புயல் எதிர்த்திடும் ஓர் இலை போல...!
பனித்துளிதான் என்ன செய்யுமோ?
மூங்கில் காட்டில் தீ விழும்போது,
மூங்கில் காடென்று ஆயினள் மாது!
(கண்ணாளனே)
ஒரு மின்சாரம் பார்வையின் வேகம், வேகம்
உன்னோடு நான் கண்டுகொண்டேன்!
ஒரு பெண்ணோடு தோன்றிடும் தாபம் தாபம்
என்னோடு நான் கண்டுகொண்டேன்!
என்னை மறந்துவிட்டேன்
இந்த உலகத்தில் நானில்லை நானில்லை!
உன்னை இழந்துவிட்டால்
எந்த மலரிலும் தேனில்லை தேனில்லை!
இது கனவா? இல்லை நினைவா?
என்னைக் கிள்ளி உண்மை தெளிந்தேன்..!
உன்னைப் பார்த்தெந்தன் தாய்மொழி மறந்தேன்!
(கண்ணாளனே)

Monday, May 08, 2006

93. இன்னொரு பூமி...தாய்!

தாயின் பெருமை சொல்லும் இன்னொரு அற்புதமான பாடல். ஜேசுதாஸின் அற்புதமான குரலில் ஒலிக்கும் பாடல்! படமாக்கப்பட்ட விதமும் அருமை.
--------------------------------------------------
படம் : ராம்
இசை : யுவன் ஷங்கர் ராஜா
வரிகள் : சினேகன்
குரல் : K.J.ஜேசுதாஸ்
--------------------------------------------------
ஆராரிராரோ! நான் இங்கே பாட,
தாயே நீ கண் உறங்கு! என்னோட மடி சாய்ந்து!
வாழும் காலம் யாவுமே, தாயின் பாதம் சுவர்க்கமே!

வேதம் நான்கும் சொன்னதே! அதை நான் அறிவேனே....!
அம்மா என்னும் மந்திரமே, அகிலம் யாவும் ஆள்கிறதே...!
(ஆராரிராரோ)
வேர் இல்லாத மரம் போல் என்னை
நீ பூமியில் நட்டாயே!
ஊர் கண் எந்தன் மேலே பட்டால்
உன் உயிர் நோகத் துடித்தாயே!
உலகத்தின் பந்தங்கள் எல்லாம்
நீ சொல்லித் தந்தாயே!
பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில்
வழி நடத்திச் சென்றாயே!
உனக்கே ஓர் தொட்டில் கட்டி
நானே தாயாய் மாறிட வேண்டும்!
(ஆராரிராரோ)
தாய் சொல்கின்ற வார்த்தைகள் எல்லாம்
நோய் தீர்க்கின்ற மருந்தல்லவா?
மண் பொன் மேலே ஆசை துரந்த
கண் தூங்காத உயிரல்லவா?
காலத்தின் கணக்குகளில்
செலவாகும் வரவும் நீ!
சுழல்கின்ற பூமியின் மேலே
சுழலாத பூமியும் நீ!
இறைவா! நீ ஆணையிடு!
தாயே எந்தன் மகளாய் மாற...!
(ஆராரிராரோ)

92. கனா கண்டேனடி தோழி....!

வித்யாசாகரின் அற்புதமான இசை, மது பாலகிருஷ்ணாவின் குரல், முக்கியமாக யுகபாரதியின் வரிகள் இப்பாடலின் சிறப்பம்சங்கள். நல்ல தமிழில் பாடல்கள் எழுதும் சில பாடலாசிரியர்களில் யுகபாரதியும் ஒருவர். நன்றாகவே எழுதி இருக்கிறார்.
------------------------------------------------
படம் : பார்த்திபன் கனவு
இசை : வித்யாசாகர்
வரிகள் : யுகபாரதி
குரல் : மது பாலகிருஷ்ணா
------------------------------------------------
கனா கண்டேனடி தோழி....!
கனா கண்டேனடி...! கனா கண்டேனடி..!
கனா கண்டேனடி...!
(கனா)
உன் விழி முதல் மொழி வரை முழுவதும் கவிதைகள்
அகமெது புறமெது புரிந்தது போலே கனா கண்டேனடி...!
உன் முடி முதல் அடி வரை முழுவதும் இனிமைகள்
சுவையெது சுகமெது அறிந்தது போலே
கனா கண்டேனடி தோழி...! கனா கண்டேனடி!
(கனா)
எதையோ என் வாய் சொல்லத் தொடங்க
அதையே உன் வாய் சொல்லி அடங்க
உதடுகள் நான்கும் ஒட்டிக்கொள்ள நான் கண்டேன்!
நிலம் போல் உன் மனம் விரிந்து கிடக்க
நிழல் போல் என் மனம் சரிந்து படுக்க
இதயம் இரண்டும் கட்டிக் கொள்ள நான் கண்டேன்!
ஒரு கண்ணில் அமுதம் கண்டேன்!
மறு கண்ணில் அமிலம் கண்டேன்!
எங்கெங்கோ தேடித் தேடி
உன்னில் என்னை நான் கண்டேன்!
(கனா)
இடை மேல் என் விரல் கவிதை கிறுக்க,
படை போல் உன் விரல் பதறித் தடுக்க,
கூச்சம் உன்னை நெட்டித் தள்ள நான் கண்டேன்!
கொடியினில் காய்கிற சுடிதார் எடுத்து
மடிக்கிற சாக்கில் வாசனை பிடித்து
மூச்சில் உன்னைச் சொட்டச் சொட்ட நான் கண்டேன்!
நிறம் இல்லா உலகம் கண்டேன்!
நிறமெல்லாம் உன்னில் கண்டேன்!
எங்கெங்கோ தேடித் தேடி
என்னில் உன்னை நான் கண்டேன்!
(கனா)

91. இதுதான் எங்கள் வாழ்க்கை!

வாலியின் வரிகளில் நல்ல அழுத்தமும், சோகமும் கலந்திருக்கின்றன. நல்ல இசை! M.G.R. படப்பாடல்களில் மிகப் பிரபலமான பாடல்களில் இதுவும் ஒன்று! T.M.Sன் குரல் வளமும் பாடலுக்குச் சிறப்பு சேர்க்கிறது.
-----------------------------------------------------------
படம் : படகோட்டி
இசை : விஸ்வநாதன் & ராமமூர்த்தி
வரிகள் : வாலி
குரல் : T.M.சௌந்தரராஜன்
-----------------------------------------------------------
தரை மேல் பிறக்க வைத்தான் - எங்களைத்
தண்ணீரில் பிழைக்க வைத்தான்
கரை மேல் இருக்க வைத்தான் - பெண்களைக்
கண்ணீரில் துடிக்க வைத்தான்
தரை மேல் பிறக்க வைத்தான்....!

கட்டிய மனைவி, தொட்டில் பிள்ளை,

உறவைக் கொடுத்தவர் அங்கே!
அலை கடல் மேலே அலையாய் அலைந்து
உயிரைக் கொடுப்பவர் இங்கே!
வெள்ளி நிலாவே விளக்காய் எரியும்
கடல்தான் எங்கள் வீடு
வெள்ளி நிலாவே விளக்காய் எரியும்
கடல்தான் எங்கள் வீடு
முடிந்தால் முடியும், தொடர்ந்தால் தொடரும்,
இதுதான் எங்கள் வாழ்க்கை!
இதுதான் எங்கள் வாழ்க்கை!
(தரை மேல்)
கடல் நீர் நடுவே பயணம் போனால்
குடிநீர் தருபவர் யாரோ?
தனியாய் வந்தோர் துணிவைத் தவிர
துணையாய் வருபவர் யாரோ?
ஒருநாள் போவார், ஒரு நாள் வருவார்
ஒவ்வொரு நாளும் துயரம்!
ஒருநாள் போவார், ஒரு நாள் வருவார்
ஒவ்வொரு நாளும் துயரம்!
அரை ஜான் வயிற்றை வளர்ப்பவர் உயிரை
ஊரார் நினப்பது சுலபம்...!
ஊரார் நினைப்பது சுலபம்...!
(தரை மேல்)

Friday, May 05, 2006

90. மரணம் மீண்ட ஜனனம் நீ.....!

நான் மிகவும் ரசித்த பாடல்களில் ஒன்று! பாடலின் இசையும், வரிகளும், படமாக்கப்பட்ட விதமும் அருமை! சின்மயிக்கு இது முதல் பாடல் என்று நினைக்கிறேன். நன்றாகவே பாடி இருக்கிறார்.ஒளிப்பதிவு செய்த ரவி.K.சந்திரனும், மணிரத்னமும் கூட பாராட்டப்பட வேண்டியவர்களே!
---------------------------------------------
படம் : கன்னத்தில் முத்தமிட்டால்
இசை : A.R.ரஹ்மான்
வரிகள் : வைரமுத்து
குரல் : ஜெயச்சந்திரன் & சின்மயி
---------------------------------------------
ஆ:
நெஞ்சில் ஜில் ஜில் ஜில் ஜில்,
காதில் தில் தில் தில் தில்,
கன்னத்தில் முத்தமிட்டால்...!
நீ கன்னத்தில் முத்தமிட்டால்
(நெஞ்சில்)
பெ:
ஒரு தெய்வம் தந்த பூவே!
கண்ணில் தேடல் என்ன தாயே!
(ஒரு தெய்வம்)
வாழ்வு தொடங்கும் இடம் நீதானே....!
வாழ்வு தொடங்கும் இடம் நீதானே!
வானம் முடியுமிடம் நீதானே!
காற்றைப் போல நீ வந்தாயே!
சுவாசமாக நீ நின்றாயே!
மார்பில் ஊறும் உயிரே...!
(ஒரு தெய்வம்)
(நெஞ்சில்)
எனது சொந்தம் நீ.... எனது பகையும் நீ!
காதல் மலரும் நீ.... கருவில் முள்ளும் நீ!
செல்ல மழையும் நீ.... சின்ன இடியும் நீ!
(செல்ல)
பிறந்த உடலும் நீ.... பிரியும் உயிரும் நீ!
(பிறந்த)
மரணம் மீண்ட ஜனனம் நீ.....!
(ஒரு தெய்வம்)
(நெஞ்சில்)
எனது செல்வம் நீ... எனது வறுமை நீ!
இழைத்தக் கவிதை நீ..... எழுத்துப் பிழையும் நீ!
இரவல் வெளிச்சம் நீ.... இரவின் கண்ணீர் நீ!
(இரவல்)
எனது வானம் நீ..... இழந்த சிறகும் நீ!
(எனது)
நான் தூக்கி வளர்த்த துயரம் நீ.....!

Thursday, May 04, 2006

89. காதல் சொன்ன கணமே! அது கடவுளைக் கண்ட கணமே!

இந்தப் பாடல், தமிழ்த்திரையில் "புது"க்கவிஞர்கள் பலர் நன்றாக எழுதி வருகிறார்கள் என்பதற்குச் சான்றாக இருக்கிறது. இதில் வரும் ஒவ்வொரு வரியையும் நான் ரசிக்கிறேன். படமாக்கப்பட்ட விதமும் அருமை. ஷங்கருக்கே உரித்தான பிரம்மாண்டம் இப்பாடலிலும் தெரியும். இந்தக் கபிலன், கவிஞர் வைரமுத்துவின் மகன் என்று நண்பர்கள் பலர் நினைத்திருந்தனர். இவர் வேறு கபிலன் என்று எனக்குத் தெரிந்த உண்மையை எல்லோருக்கும் சொல்லவேண்டியதாய் இருந்தது.
-------------------------------------------------------
படம் : பாய்ஸ்
இசை : A.R.ரஹ்மான்
வரிகள் : கபிலன்
குரல் : கார்த்திக் & சித்ரா சிவராமன்
-------------------------------------------------------
ஆ:
எகிறி குதித்தேன், வானம் இடித்தது!
பாதங்கள் இரண்டும் பறவையானது!
விரல்களின் காம்பில் பூக்கள் முளைத்தது!
புருவங்கள் இறங்கி மீசை ஆனது
அலே அலே! அலே அலே!
அலே அலே அலே அலே அலே அலே!
(அலே)
ஆ:
ஆனந்த தண்ணீர் மொண்டு குடித்தேன்!
ஒவ்வொரு பற்களிலும் சிரித்தேன்!
கற்கண்டைத் தூக்கிக் கொண்டு நடந்தேன்....
ஒரு எறும்பாய்...!
பெ:
நான் தண்ணீரில் மெல்ல மெல்ல நடந்தேன்.....
ஒரு இலையாய்.....!
(அலே..)
ஆ:
காதல் சொன்ன கணமே! அது
கடவுளைக் கண்ட கணமே!
காற்றாய்ப் பறக்குது மனமே ஓ!
(காதல்)
(எகிறி)
ஆ:
நரம்புகளில் மின்னல் நுழைகிறதே!
உடல் முழுதும் நிலா உதிக்கிறதே!
பெ:
வெண்ணிலவை இவன் வருடியதும்,
விண்மீனாய் நான் சிதறிவிட்டேன்!
ஆ:
ஒரு விதை இதயத்தில் விழுந்தது,
அது தலை வரை கிளைகளாய் முளைக்கிறதே!
(அலே)
பெ:
கலங்காத குளம் என இருந்தவள்
ஒரு தவளை தான் குதித்ததும் வற்றி விட்டேன்
(காதல்)
(எகிறி)
பெ:
மணல் முழுதும் இன்று சர்க்கரையா?
கடல் முழுதும் இன்று குடிநீரா?
ஆ:
கரை முழுதும் உந்தன் சுவடுகளா?
அலை முழுதும் உந்தன் புன்னகையா?
பெ:
காகிதம் என் மேல் பறந்ததும்,
அது கவிதை நூலென மாறியதே!
(அலே)
ஆ:
வானவில் உரசியே பறந்ததும்,
இந்த காக்கையும் மயிலென மாறியதே...!
(காதல்)
(எகிறி)

Wednesday, May 03, 2006

88. காதல்தானே, இது காதல்தானே!

கேட்ட உடனேயே பிடித்துப்போன ஒரு பாடல். பார்த்த பிறகு இன்னும் பிடித்துவிட்டது. படமும் நன்றாகவே இருந்தது. இயக்குநர் "சசி"யின் மூன்றாவது படம். பாடல் வரிகளுக்குச் சொந்தக்காரர் யார் என்று வெகு நாட்களாகத் தேடிக்கொண்டிருந்தேன். வைரமுத்து என்று தெரிந்தபோது மிகவும் சந்தோஷம். ஆலப்புழை மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைகளில் படமாக்கப்பட்ட இப்பாடல், சமீபத்தில் நான் மிகவும் ரசித்த ஒரு பாடல்.
Sentonio Dersio. இந்தப் பெயரை எப்படி உச்சரிப்பது என்றே தெரியவில்லை. இவர்தான் இப்படத்தின் ஒளிப்பதிவாளர். நன்றாகவே பதிவு செய்திருக்கிறார்.

எனக்குப் பிடித்த வரிகள்,

"லட்சம் பல லட்சம் என்று தாய்மொழியில் சொல்லிருக்க,
ஒத்த சொல்லும் சிக்கவில்லை எதனாலே?
பந்தி வச்ச வீட்டுக்காரி, பாத்திரத்தைக் கழுவிவிட்டு,
பட்டினியாய்க் கிடப்பாளே அதுபோலே...!"


"காதல் எந்தன் வீதி வழி கையை வீசி வந்த பின்னும்,
கால் கடுக்கக் காத்திருக்கேன் எதனாலே?
பிப்ரவரி மாதத்துக்கு நாள் ஒன்று கூடி வர
ஆண்டு நாலு காத்திருக்கும் அது போலே...!"

--------------------------------------------------------
படம் : டிஷ்யும்
இசை : விஜய் ஆன்டனி
வரிகள் : வைரமுத்து
குரல் : ஜெயதேவ்
--------------------------------------------------------
நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய் - பெண்ணே!
நெற்றிப்பொட்டில் தீயை வைக்கிறாய்!
கட்டிப்போட்டுக் காதல் செய்கிறாய் - முதுகில்
கட்டெறும்பு போலே ஊர்கிறாய்!
காதல்தானே! இது காதல்தானே!
உன்னை நினைப்பதை நிறுத்தி விட்டால்,
நெஞ்சு ஏனடி துடிக்கவில்லை!
எண்ணம் யாவையும் அழித்துவிட்டேன்!
இன்னும் பூமுகம் மறக்கவில்லை!
(நெஞ்சாங்கூட்டில்)
ஏ!விண்ணைத் துடைக்கின்ற முகிலை,
வெள்ளி நிலவை, மஞ்சள் நட்சத்திரத்தை,
என்னைத்தேடி மண்ணில் வரவழைத்து,
உன்னைக் காதலிப்பதாய் உரைத்தேன்!
இன்று பிறக்கின்ற பூவுக்கும், சிறு புல்லுக்கும்
காதல் உரைத்து முடித்தேன்!
உள்ளம் காதலிக்கும் உனக்கு மட்டும்
இன்னும் சொல்லவில்லையே....! இல்லையே!
லட்சம் பல லட்சம் என்று தாய்மொழியில் சொல்லிருக்க,
ஒத்த சொல்லும் சிக்கவில்லை எதனாலே?
பந்தி வச்ச வீட்டுக்காரி, பாத்திரத்தைக் கழுவிவிட்டு,
பட்டினியாய்க் கிடப்பாளே அதுபோலே...!
(நெஞ்சாங்கூட்டில்)
ஏ! சின்னச் சின்னச் செல்லக் குறும்பும்,
சீனிச்சிரிப்பும் என்னைச் சீரழிக்குதே!
விறுவிறுவென வளரும் பழம் எந்தன்
விரதங்களை வெல்லுதே!
உன்னைக் கரம் பற்றி இழுத்து,
வளை உடைத்து, காதல் சொல்லிடச் சொல்லுதே!
வெட்கம் இருபக்கம் மீசை முளைத்து,
என்னைக் குத்திக்குத்தியே கொல்லுதே!
காதல் எந்தன் வீதி வழி கையை வீசி வந்த பின்னும்,
கால் கடுக்கக் காத்திருக்கேன் எதனாலே?
பிப்ரவரி மாதத்துக்கு நாள் ஒன்று கூடி வர
ஆண்டு நாலு காத்திருக்கும் அது போலே...!
(நெஞ்சாங்கூட்டில்)

Monday, May 01, 2006

87. தோல்வியும் கொஞ்சம் வேண்டுமடி!

இந்தப் பாடலில் எனக்கு மிகவும் பிடித்த அம்சம் பாடல் படமாக்கப்பட்ட விதம். ஒரு நல்ல திரைக்கதையை இந்தப் பாடலிலேயே சொல்லியிருப்பார் ஜீவா. வைரமுத்துவின் வரிகளும் இந்தச் சூழ்நிலைக்கு ஏற்றவாறு அமைந்திருக்கும். எனக்குப் பிடித்த வரிகள்,
"கனவுக்குள்ளே காதலைத் தந்தாய்,
கனுக்கள் தோறும் முத்தம்!
கனவு கலைந்து எழுந்து பார்த்தால்,
கைகள் முழுக்க ரத்தம்!
துளைகள் இன்றி நாயனமா?
தோல்விகள் இன்றி பூரணமா?"

---------------------------------------------------------
படம் : உள்ளம் கேட்குமே
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்
வரிகள் : வைரமுத்து
குரல் : ஹரிஹரன்
---------------------------------------------------------
ஓ மனமே! ஓ மனமே!
உள்ளிருந்து அழுவது ஏன்?
ஓ மனமே! ஓ மனமே!
சில்லு சில்லாய் உடைந்தது ஏன்?
மழையைத் தானே யாசித்தோம்,
கண்ணீர்த் துளிகளைத் தந்தது யார்?
பூக்கள் தானே யாசித்தோம்,
கூழாங்கற்களை எறிந்தது யார்?
(ஓ மனமே)
மேகத்தை இழுத்து, போர்வையாய் விரித்து,
வானத்தில் உறங்கிட ஆசையடி!
நம் ஆசை உடைத்து, நார் நாராய்க் கிழித்து,
முள்ளுக்குள் எரிந்தது காதலடி!
கனவுக்குள்ளே காதலைத் தந்தாய்,
கனுக்கள் தோறும் முத்தம்!
கனவு கலைந்து எழுந்து பார்த்தால்,
கைகள் முழுக்க ரத்தம்!
துளைகள் இன்றி நாயனமா?
தோல்விகள் இன்றி பூரணமா?
(ஓ மனமே)
இன்பத்தில் பிறந்து இன்பத்தில் வளர்ந்து,
இன்பத்தில் மடிந்தவன் யாருமில்லை!
துன்பத்தில் பிறந்து துன்பத்தில் வளர்ந்து,
துன்பத்தில் முடிந்தவன் யாரும் இல்லை!
இன்பம் பாதி துன்பம் பாதி,
இரண்டும் வாழ்வின் அங்கம்!
நெருப்பில் வெந்து நீரினில் குளித்தால்,
நகையாய் மாறும் தங்கம்!
தோல்வியும் கொஞ்சம் வேண்டுமடி!
வெற்றிக்கு அதுவே ஏணியடி!
(ஓ மனமே)