Sunday, April 30, 2006

86. போனால் போகட்டும் போடா!

பழைய பாடல்களை விரும்பிக் கேட்பவர்களின் Default Favouriteஆக இந்தப்பாடல் பெரும்பாலும் இருக்கும். கண்ணதாசனின் வரிகளின் நுட்பத்தை அறிய விரும்புபவர்கள் இந்த ஒரு பாடலைக் கேட்டாலே போதும்.
-----------------------------------------------------
படம் : பாலும் பழமும்
இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி
வரிகள் : கண்ணதாசன்
குரல் : T.M.சௌந்தரராஜன்
-----------------------------------------------------
போனால் போகட்டும் போடா! - இந்த
பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா?
(போனால்)
வந்தது தெரியும், போவது எங்கே?
வாசல் நமக்கே தெரியாது!
வந்தவரெல்லாம் தங்கி விட்டால் இந்த
மண்ணில் நமக்கே இடமேது?
வாழ்க்கை என்பது வியாபாரம் - அதில்
ஜனனம் என்பது வரவாகும் - வரும்
மரணம் என்பது செலவாகும்
போனால் போகட்டும் போடா...!
(போனால்)
இரவல் தந்தவன் கேட்கின்றான் அதை
இல்லையென்றால் அவன் விடுவானா?
உறவைச் சொல்லி அழுவதனாலே
உயிரை மீண்டும் தருவானா?
கூக்குரலாலே கிடைக்காது - இது
கோர்ட்டுக்குப் போனால் ஜெயிக்காது - அந்தக்
கோட்டையில் நுழைந்தால் திரும்பாது
போனால் போகட்டும் போடா...!
(போனால்)
எலும்புக்கும் சதைக்கும் மருத்துவம் கண்டேன்
இதற்கொரு மருந்தைக் கண்டேனா?
இருந்தால் அவளைத் தன்னந்தனியே
எரியும் நெருப்பில் விடுவேனா?
நமக்கும் மேலே ஒருவனடா - அவன்
நாலும் தெரிந்த தலைவனடா - தினம்
நாடகம் ஆடும் கலைஞனடா
போனால் போகட்டும் போடா...!
(போனால்)

Friday, April 28, 2006

85. மனிதர் உணர்ந்து கொள்ள, இது மனிதக்காதல் அல்ல!

காலத்தை வென்ற ஒரு படத்தில் இடம்பெற்ற காலத்தை வென்ற ஒரு பாடல். இந்தப் பாடலை எந்த விதத்தில் பாராட்டுவது என்று எனக்குத் தெரியவில்லை. பாடலைக் கேட்ட, பார்த்த எல்லோருக்கும் இதன் சிறப்பு தன்னால் புரியும்.
---------------------------------------------------
படம் : குணா
இசை : இளையராஜா
வரிகள் : வாலி
குரல் : கமல்ஹாசன் & ஜானகி
----------------------------------------------------
ஆ:
கண்மணி அன்போடு காதலன் நான், நான்,
எழுதும் லெட்டர், சீ மடல், இல்ல கடுதாசி வச்சுக்கலாமா?
வேண்டாம் கடிதமே இருக்கட்டும்! படி
பெ:
கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே!
ஆ:
பாட்டாவே படிச்சிட்டியா? அப்போ நானும், ம்,
மொதல்ல கண்மணி சொன்னேல்ல,
இங்க பொன்மணி போட்டுக்க.
பொன்மணி உன் வீட்டுல சௌக்கியமா?
நான் இங்க சௌக்கியம்!
பெ:
பொன்மணி உன் வீட்டில் சௌக்கியமா?
நான் இங்கு சௌக்கியமே!
ஆ:
உன்னை நெனச்சி பாக்கும் போது,
கவிதை மனசுல அருவி மாதிரி கொட்டுது!
ஆனா அத எழுதணும்னு உட்கார்ந்தா
இந்த எழுத்துதான் வார்த்த
பெ:
உன்னை எண்ணிப் பார்க்கையில் கவிதை கொட்டுது
ஆ:
அதான்
பெ:
அதை எழுத நினைக்கையில் வார்த்தை முட்டுது
ஆ:
அதே தான்! பிரமாதம்! கவிதை! படி
பெ:
கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே
பொன்மணி உன் வீட்டில் சௌக்கியமா? நான் இங்கு சௌக்கியமே!
உன்னை எண்ணிப் பார்க்கையில் கவிதை கொட்டுது!
அதை எழுத நினைக்கையில் வார்த்தை முட்டுது....ஓஹோ!
(கண்மணி)
ஆ:
ம், எனக்குண்டான காயம் அது தன்னால ஆறிடும்,
அது என்னவோ தெரியல, என்ன மாயமோ தெரியல,
எனக்கு ஒண்ணுமே ஆவறதில்லை!
இதுவும் எழுதிக்கோ!
நடுவுல நடுவுல மானே, தேனே, பொன் மானே,
எல்லாம் போட்டுக்க!
எனக்கு என்ன காயம்னாலும் என் உடம்பு தாங்கிடும்,
உன் உடம்பு தாங்குமா? தாங்காது!
அபிராமி! அபிராமி! அபிராமி!
பெ:
அதையும் எழுதணுமா?
ஆ:
இது காதல்!
என் காதல் என்னன்னு சொல்லாம,
ஏங்க ஏங்க அழுகையா வருது,
ஆனா நான் அழுது, என் சோகம் உன்னை தாக்கிடுமோ
அப்படின்னு நினைக்கும் போது,
வர்ற அழுகை கூட நின்னுடுது ஹா! ஹா!
மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக் காதல் அல்ல!
அதையும் தாண்டி புனிதமானது!
பெ:
உண்டான காயம் இங்கு தன்னாலே ஆறிப்போன
மாயமென்ன பொன் மானே! பொன் மானே!
என்ன காயம் ஆன போதும், என் மேனி தாங்கிக் கொள்ளும்,
உந்தன் மேனி தாங்காது செந்தேனே.....!
எந்தன் காதல் என்னெவென்று,
சொல்லாமல் ஏங்க ஏங்க அழுகை வந்தது!
எந்தன் சோகம் உன்னைத் தாக்கும்,
எண்றெண்ணும் போது வந்த அழுகை நின்றது!
மனிதர் உணர்ந்து கொள்ள, இது மனிதக்காதல் அல்ல!
அதையும் தாண்டி புனிதமானது!
ஆ:
அபிராமியே! தாலாட்டும் சாமியே! நான் தானே தெரியுமா?
சிவகாமியே! சிவனில் நீயும் பாதியே! அதுவும் உனக்குப் புரியுமா?
பெ:
சுப லாலி லாலியே லாலி லாலியே!
அபிராமி லாலியே லாலி லாலியே!

84. ஏன் பெண்ணென்று பிறந்தாய்?

காதலின் காய்ச்சலில் புலம்பும் கவிஞனின் வார்த்தைகள்தான் என்றாலும், கவிதை வரிகள் மனதைத் தொடுகின்றன.
--------------------------------------------
படம் : லவ் டுடே
இசை : சிவா
வரிகள் : வைரமுத்து
குரல் : உன்னி கிருஷ்ணன்
--------------------------------------------
ஏன் பெண்ணென்று பிறந்தாய்?
ஏன் என் கண்ணில் விழுந்தாய்?
ஏன் ஒரு பாதி சிரித்தாய்?
என் உயிர் பூவை எரித்தாய்?
முதல் நாள் பார்த்தாய்... உறக்கம் கெடுத்தாய்!
முறையா என்றேன், கண்கள் பறித்தாய்!
என் வலி தீர ஒரு வழி என்ன?
என் பனிப் பூவே மீண்டும் பார்த்தால் என்ன?
(ஏன்)
நீ சூடும் ஒரு பூ தந்தால்,
என் ஆஸ்தி எல்லாம் கொடுப்பேன்!
உன் வாயால் என் பேர் சொன்னால்,
உன் காலடியில் கிடப்பேன்!
தூக்கத்தை தொலைத்தேனே, துடிக்குது நெஞ்சம்!
தலை போன சேவல் போல், தவிக்குது அங்கம்!
இரண்டில் ஒன்று சொல்லிவிடு!
இல்லை நீயே கொள்ளியிடு...!
(ஏன்)
நோகாமல், பிறர் காணாமல்,
உந்தன் ஆடை நுனி தொடுவேன்!
என்ன ஆனாலும், உயிர் போனாலும்,
ஒரு தென்றல் என்றே வருவேன்!
நீ என்னைப் பார்த்தால் தான் துடிக்குது உள்ளம்!
நீ என்னைப் பிரிந்தாலோ உள்ளம் வெறும் பள்ளம்!
இமயம் கேட்கும் என் துடிப்பு!
ஏனோ உனக்குள் கதவடைப்பு!
(ஏன்)

83. நெஞ்சில் நீங்காத தென்றல்

நல்ல மென்மையான பாடல், நல்ல திகில் படத்தில். வாலியின் வரிகள் அருமை. இசையும் அற்புதம்.
---------------------------------------------
படம் : கலைஞன்
இசை : இளையராஜா
வரிகள் : வாலி
குரல் : K.J.ஜேசுதாஸ் & ஜானகி
---------------------------------------------
ஆ:
எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீதானா?
எண்ணம் எங்கும் நீ பாடும் திரு திரு தில்லானா!
(எந்தன்)
இசையின் ஸ்வரங்கள் தேனா?
இசைக்கும் குயில் நீதானா? வா....!
ஆ:
பனியில் நனையும் மார்கழிப் பூவே!
எனை நீ பிரிந்தால் ஏதொரு வாழ்வே?
பெ:
உனக்கென பிறந்தவள் நானா?
நிலவுக்குத் துணை இந்த வானா?
ஆ:
வாழ்ந்தேனே உறவின்றி முன்னால்
வந்தாயே உறவாக இந்நாள்...!
(எந்தன்)
பெ:
சுகங்கள் மெதுவாய் நீ தர வேண்டும்!
நகங்கள் பதிந்தால் காயங்கள் தோன்றும்!
ஆ:
உதடுகள் உரசிடத்தானே..!
வலிகளும் குறைந்திடும் மானே...!
பெ:
நான் சூடும் நூலாடை போலே
நீ ஆடு பூமேனி மேலே...!
(எந்தன்)

82. பெண்கள் உள்ள வரை ஆண்கள் ஜெயிப்பதில்லை!

இப்போது மிகப் பிரபலமாக இருக்கும் யுவன் ஷங்கர் ராஜாவின் ஆரம்பகாலப் படங்களில் ஒன்று! வித்தியாசமான மெட்டு. ஹரிஹரனின் குரலும், புதுவை நம்பி(யார் இவர்?)யின் வரிகளும் பாடலின் ஜீவன்.
------------------------------------------------
படம் : மௌனம் பேசியதே
இசை : யுவன் ஷங்கர் ராஜா
வரிகள் : புதுவை நம்பி
குரல் : ஹரிஹரன் & யுவன் ஷங்கர் ராஜா
------------------------------------------------
ஹ:
சின்னச் சின்னதாய்ப் பெண்ணே,
என் நெஞ்சில் முட்களாய்த் தைத்தாய்!
என் விழியை வாள் கொண்டு வீசி,
இளமனதில் காயங்கள் தந்தாய்!
துன்பம் மட்டும் என் உறவா?
உன்னை காதல் செய்ததே தவறா?
யு:
உயிரே! உயிரே!
ஹ:
காதல் செய்தால் பாவம்! பெண்மை எல்லாம் மாயம்!
உண்மை கண்டேன் உன்னால் பெண்ணே!
பெண்கள் கண்ணில் சிக்கும், ஆண்கள் எல்லாம் பாவம்!
உண்மை கண்டேன் உன்னால் பெண்ணே!
ஹ:
காதல் வெறும் மேகம் என்றேன்,
அடைமழையாய் வந்தாய்!
மழையோடு நனைந்திட வந்தேன்,
நீ தீயை மூட்டினாய்!
மொழியாக இருந்தேனே...!
உன்னால் இசையாக மலர்ந்தேனே!
என் உயிரோடு கலந்தவள் நீதான், ஏ! பெண்ணே!
கனவாகி கலைந்ததும் ஏனோ? சொல் கண்ணே!
மெளனம் பேசியதே! உனக்கது தெரியலையா?
காதல் வார்த்தைகளை, கண்கள் அறியலையா?
யு:
நானன நனனன நானா...நன நானனா நானனா
நானன நனனன நானா...நன நானனா நானனா
(காதல்)
ஹ:
துணை இன்றித் தனியாய்ச் சென்றேன்
என் நிழலாய் வந்தாய்!
விடை தேடும் மாணவனானேன்!
என் விடையும் நீ என,
வந்தாயே என் வழியில்...!
காதல் தந்தாயே உன் மொழியில்...!
என் நெஞ்சில் காதல் வந்து, நான் சொன்னேன்
உன் காதல் வேறோர் மனதில், எனை நொந்தேன்!
கண்கள் உள்ள வரை காதல் அழிவதில்லை!
பெண்கள் உள்ள வரை ஆண்கள் ஜெயிப்பதில்லை!
யு:
நானன நனனன நானா...நன நானனா நானனா
நானன நனனன நானா...நன நானனா நானனா

(காதல்)

81. கண்களைத் திறந்து கொண்டு கனவு காண்கிறது...காதல்!

இனிமையான இசை, நல்ல வரிகள், நல்ல குரல்வளம், எல்லாம் இருந்தும் இந்தப் பாடல் தகுதியான பிரபலத்தைப் பெறவில்லை. என் விருப்பப்பாடல்களில் ஒன்று.
-----------------------------------------------------
படம் : உயிரோடு உயிராக
இசை : வித்யாசாகர்
வரிகள் : வைரமுத்து
குரல் : ஹரிஹரன் & சித்ரா
-----------------------------------------------------
பெ:
அன்பே அன்பே நீ என் பிள்ளை!
தேகம் மட்டும் காதல் இல்லை!
பூமியில் நாம் வாழும் காலந்தோறும்,
உண்மையில் என் ஜீவன் உன்னைச் சேரும்!
பெ:
கண்ணா என் கூந்தலில் சூடும் பொன் பூக்களும்
உன்னை உன்னை அழக்க...
ஆ:
கண்ணே உன் கைவளை மீட்டும் சங்கீதங்கள்
என்னை என்னை உடைக்க...
பெ:
கண்களைத் திறந்து கொண்டு நான் கனவுகள் காணுகிறேன்
ஆ:
கண்களை மூடிக்கொண்டு நான் காட்சிகள் தேடுகிறேன்
பெ:
உன் பொன்விரல் தொடுகையிலே நான் பூவாய் மாறுகிறேன்
(அன்பே)
ஆ:
யாரும் சொல்லாமலும் ஓசை இல்லாமலும்
தீயும் பஞ்சும் நெருங்க...
பெ:
யாரைப் பெண்ணென்பது யாரை ஆணென்பது
ஒன்றில் ஒன்று அடங்க
ஆ:
உச்சியில் தேன் விழுந்தே என் உயிருக்குள் இனிக்குதடி
பெ:
மண்ணகம் மறந்து விட்டேன் என்னை மாற்றுக பழையபடி
ஆ:
உன் வாசத்தை சுவாசிக்கிறேன் என் ஆயுள் நீளுமடி
(அன்பே)

Thursday, April 27, 2006

80. கோலம்...! திருக்கோலம்!

வைரமுத்து இந்தப் பாடலைப் பற்றிச் சொல்லும்போது, "கண்மூடி இந்தப் பாடலைக் கேட்டுப்பாருங்கள். உங்கள் வீட்டுப்பெண் மணக்கோலத்தில் விடை பெற்றுச் செல்வது போல் தோன்றும்" என்று சொல்வார். உண்மைதான். நடிகர் திலகத்தின் நடிப்பை நான் மிகவும் ரசித்த சில படங்களில் இதுவும் ஒன்று! இசை அமைப்பாளர் யார் என்று தெரியவில்லை.
-----------------------------------------------------------
படம் : அன்புள்ள அப்பா
இசை : ஷங்கர் கணேஷ்
வரிகள் : வைரமுத்து
குரல் :K.J.ஜேசுதாஸ்
------------------------------------------------------------
மரகத வள்ளிக்கு மணக்கோலம் - என்
மங்கலச் செல்விக்கு மலர்க்கோலம்!
கண்மணித் தாமரை கால் கொண்டு நடந்தாள்,
கண்களில் ஏனிந்த நீர்க்கோலம்?
கோலம்...! திருக்கோலம்! கோலம்....! திருக்கோலம்!
(மரகத)
காலையில் கதம்பங்கள் அணிந்திருப்பாள்!
மாலையில் மல்லிகை முடிந்திருப்பாள்!
திங்களில் சாமந்தி வைத்திருப்பாள்!
வெள்ளியில் முல்லைகள் சுமந்திருப்பாள்!
கட்டித்தங்கம் இனிமேல் அங்கே
என்ன பூவை அணிவாளோ?
கட்டிக்கொண்ட கணவன் வந்து
சொன்ன பூவை அனிவாளோ?
தினந்தோறும் திருநாளோ?
(மரகத)
மலரென்ற உறவு பறிக்கும் வரை..!
மகளென்ற உறவு கொடுக்கும் வரை!
உறவொன்று வருவதில் மகிழ்ந்துவிட்டேன்!
உறவொன்று பிரிவதில் அழுதுவிட்டேன்!
எந்தன் வீட்டுக் கன்று இன்று
எட்டி எட்டிப் போகிறது!
கண்ணின் ஓரம் கண்ணீர் வந்து
எட்டி எட்டிப் பார்க்கிறது!
இமைகள் அதை மறைக்கிறது!
(மரகத)

79. வானவில்லின் துண்டு...அவள்!

என் விருப்பப் பாடல்களில் இன்னொன்று. சமூக உணர்வோடு கூடிய ஒரு படத்தில் அமைந்த ஒரு காதல் பாடல். வரிகள் அனைத்தும் வைரம்தான். எனக்குப் பிடித்த வரிகள்,
"வானவில்லின் துண்டொன்று மண்ணில் வந்து,
யாருக்கும் சொல்லாமல் பெண்ணானதே....!"

-----------------------------------------------------------
படம் : கருத்தம்மா
இசை : A.R.ரஹ்மான்
வரிகள் : வைரமுத்து
குரல் : உன்னி கிருஷ்ணன் & சித்ரா
-----------------------------------------------------------
ஆ:
தென்மேற்குப் பருவக்காற்று,
தேனிப்பக்கம் வீசும்போது சாரல் இன்பச்சாரல்!
தெம்மாங்கு பாடிக்கொன்டு
சிலுசிலுவென்று சிந்துதம்மா தூறல் முத்துத்தூறல்!
பெ:
வெங்காட்டு பக்கக்கள்ளி சட்டென்று மொட்டு விட,
செங்காட்டு சில்லிச்செடி சில்லென்று பூவெடுக்க....
(தென்மேற்கு)
ஆ:
வானோடும் மண்ணோடும் இல்லாத வண்ணங்கள்,
பெண்ணோடும் கண்ணோடும் நான் காண்கிறேன்!
பெ:
தாலாட்டில் இல்லாத சங்கீத சாரங்கள்,
பாராட்டும் உன் பாட்டில் நான் கேட்கிறேன்!
ஆ:
மழைத்துளி என்ன தவம் தான் செய்ததோ?
மலர் கொண்ட மார்போடு தொட்டாடுதே!
பெ:
மழைத்துளி தொட்ட இடம் நீ தீண்டவோ?
நினைக்கையில் உள்ளூர கள்ளூறுதே....!
(தென்மேற்கு )
பெ:
நீயென்றும் நானென்றும் இரு வார்த்தை ஒன்றாகி,
நாமென்ற ஒரு வார்த்தை உண்டானதே!
ஆ:
ஆணென்றும் பெண்ணென்றும் இரு வார்த்தை ஒன்றாகி,
ஆளென்ற ஒரு வார்த்தை உண்டானதே!
பெ:
காதலென்ற மந்திரத்தின் மாயம் என்ன?
கள்ளும் முள்ளும் இப்போது பூவானதே!
ஆ:
வானவில்லின் துண்டொன்று மண்ணில் வந்து,
யாருக்கும் சொல்லாமல் பெண்ணானதே....!
(தென்மேற்கு)

Thursday, April 20, 2006

78. இது என்ன கடவுளே! புரியாது கடவுளே!

சமீப காலங்களில் நான் ரசித்த சில பாடல்களில் ஒன்று. சில வரிகளுக்கான பொருள் புரியவில்லை என்றாலும் நன்றாகவே எழுதி இருக்கிறார் முத்துக்குமார். கமலின் குரல் இந்தப் பாடலுக்கு பொருத்தமாக இருக்கிறது. தான் நடிக்காத படத்துக்காக, கமல் பாடும் இரண்டாவது பாடல் இது என நினைக்கிறேன் ( இதற்கு முன் உல்லாசம் படத்தில் "முத்தே முத்தம்மா!" பாடல் பாடினார்). பாடல் வரிகள் எழுதி அனுப்பிய நண்பன் சுரேஷிற்கு நன்றி!எனக்குப் பிடித்த வரிகள்,
"காற்றில் கனிகள் விழுந்திடும் வரைக்கும்
காத்திருக்காதே! கல்லடி கிடைக்கும்"

------------------------------------------------------
படம் : புதுப்பேட்டை
இசை : யுவன் ஷங்கர் ராஜா
வரிகள் : நா.முத்துக்குமார்
குரல் : கமல்ஹாசன்
------------------------------------------------------

நெருப்பு வாயினில் ஓரமாய் எரியும்
கத்திக் கண்ணின் இருபுறம் தெரியும்
நடக்கும் நடையில் வருபவன் புரியும்
ஊரே பார்த்து ஓரமாய் ஒதுங்கும்

இது என்ன கடவுளே!
புரியாது கடவுளே!
வேரோடு சாயும் இந்த காடே தரையாகும்....!

எதிராளி பார்க்கிறான்
தெருவோரம் நிற்கிறான்
மார்கெட்டில் முறைக்கிறான்
என்னை போட்டுத்தள்ள துடிக்கிறான்

எங்கேயும் வருகிறான்
எமனாகத் தொடர்கிறான்
முகமாற்றி அலைகிறான்
என் கண்கள் பார்த்தால் மறைகிறான்!

அவன் முந்துவானா?
நான் முந்துவேனா?
நாளை ராத்திரி வந்தால் சொல்கிறேன்

உடையும் மேகம் மழையாய்ப் பொழியும்
உதைக்கும் பந்துவேகமாய்ப் போகும்
இது என்ன கடவுளே!

புரியாது கடவுளே!
மண்ணில் உள்ள பெண்கள்
கை கோர்த்து உடல் தின்னும்...!

ஒரு கண்ணில் தூங்கிடு
மறு கண்ணைத் திறந்திரு
ஓய்வாகப் படுப்பது
அது கல்லறையில் கிடைப்பது

போகின்ற பாதைகள்
பலபேரும் போனது
புதிதாகப் பிறந்திட
நான் புத்தனில்லைவழிவிடு

இது அழித்தல் வேலை
இந்த உலகின் தேவை
அதை நாங்கள் செய்தால்
ஊர்தான் வணங்குமா?

காற்றில் கனிகள் விழுந்திடும் வரைக்கும்
காத்திருக்காதே! கல்லடி கிடைக்கும்

இது என்ன கடவுளே!
புரியாது கடவுளே!
ஒவ்வொரு நாளும் விடியல்
கண் பார்த்தால் அது புதையல்....!

Wednesday, April 12, 2006

77. ஊரைத் தெரிஞ்சுக்கிட்டேன்!

வைரமுத்துவின் அற்புதமான வரிகளில், ஜேசுதாஸ் பாடியிருக்கும் பாடல். தத்துவப்பாடல் என்றதும் நினைவுக்கு வரும் சில பாடல்களில் இதுவும் ஒன்று! இந்தத் திரைப்படம் வெளிவந்த அடுத்த வருடத்தில் "சம்சாரம் அது மின்சாரம்" திரைப்படம் வெளியானது. அந்தத் திரைப்படத்திலும் "ஊரைத் தெரிஞ்சுகிட்டேன்" என்றொரு பாடல் இடம்பெற்றுள்ளது. அந்தப் பாடலையும் எழுதியவர் வைரமுத்துதான்.
----------------------------------------------------------
படம் : படிக்காதவன்
இசை : இளையராஜா
வரிகள் : வைரமுத்து
குரல் : K.J.ஜேசுதாஸ்
----------------------------------------------------------
ஊரைத் தெரிஞ்சுக்கிட்டேன், உலகம் புரிஞ்சுக்கிட்டேன்,
கண்மணி என் கண்மணி!
ஞானம் பொறந்திருச்சு, நாலும் புரிஞ்சிருச்சு,
கண்மணி என் கண்மணி!
பச்சை குழந்தையின்னு பாலூட்டி வளர்த்தேன்,
பாலக் குடிச்சுபுட்டு பாம்பாகக் கொத்துதடி!
(ஊரைத்)
ஏது பந்தபாசம்? எல்லாம் வெளி வேஷம்!
காசு பணம் வந்தா, நேசம் சில மாசம்!
சிந்தினேன், ரத்தம் சிந்தினேன்,
அது எல்லாம் வீண் தானோ?
வேப்பிலை கருவேப்பிலை, அது யாரோ நான் தானோ?
என் வீட்டு கன்னுக்குட்டி, என்னோடு மல்லுக்கட்டி,
என் மார்பில் முட்டுதடி கண்மணி, என் கண்மணி!
தீப்பட்ட காயத்துல தேள் வந்து கொட்டுதடி கண்மணி..... கண்மணி!
(ஊரை)
நேத்து இவன் ஏணி, இன்று இவன் ஞானி!
ஆளைக் கரை சேர்த்து, ஆடும் இந்தத் தோணி!
சொந்தமே ஒரு வானவில், அந்த வர்ணம் கொஞ்ச நேரம்!
பந்தமே முள்ளானதால், இந்த நெஞ்சில் ஒரு பாரம்!
பணங்காசக் கண்டுபுட்டா புலிகூடப் புல்லைத் தின்னும்,
கலி காலாமாச்சுதடி கண்மணி என் கண்மணி!
அடங்காத காளை ஒண்ணு அடிமாடா போச்சுதடி கண்மணி..... கண்மணி!
(ஊரை)

Tuesday, April 11, 2006

76. நானாக நானில்லை தாயே!

வாலியின் வரிகளும், இளையராஜாவின் இசையும் இப்பாடலின் சிறப்பம்சங்கள்.
-----------------------------------------------
படம் : தூங்காதே தம்பி தூங்காதே
இசை : இளையராஜா
வரிகள் : வாலி
குரல் : S.P.பாலசுப்ரமணியம்
-----------------------------------------------
நானாக நானில்லை, தாயே!
நல்வாழ்வு தந்தாயே நீயே!
பாசம், ஒரு நேசம்,
கண்ணாரக் கண்டான் உன்சேயே.....!
(நானாக)
கீழ் வானிலே ஒளி வந்தது.
கூட்டை விட்டு கிளி வந்தது.
நான் பார்க்கும் ஆகாயம்,
எங்கும் நீ பாடும் பூபாளம்!
வாடும் பயிர்வாழ
நீ தானே நீர் வார்த்த கார்மேகம்!
(நானாக)
மணி மாளிகை மாடங்களும்,
மலர் தூவிய மஞ்சங்களும்,
தாய் வீடு போலில்லை!
அங்கு தாலாட்ட ஆளில்லை!
கோயில் தொழும் தெய்வம்,
நீயின்றி நான் காண வேறில்லை....!
(நானாக)

75. விளக்கு...அவள்! விட்டில்...அவன்!

பரத்வாஜ் இசையமைத்த முதல் திரைப்படம் இது...! இப்படத்தின் இயக்குனர் சரணுக்கும் இதுவே முதல் படம்! வைரமுத்துவின் வரிகள் இப்படத்தின் பாடல்களுக்குச் சிறப்பு சேர்க்கின்றன.
----------------------------------------------------------------
படம் : காதல் மன்னன்
இசை : பரத்வாஜ்
வரிகள் : வைரமுத்து
குரல் : S.P.பாலசுப்ரமணியம்
----------------------------------------------------------------
உன்னைப் பார்த்த பின்பு நான்.... நானாக இல்லையே!
என் நினைவு தெரிந்து நான்.... இதுபோல இல்லையே!
எவளோ எவளோ என்று நெடுநாள் இருந்தேன்!
இரவும் பகலும் சிந்தித்தேன்....!
இவளே, இவளே, என்று இதயம் தெளிந்தேன்!
இளமை இளமை பாதித்தேன்....!
கொள்ளை கொண்ட அந்த நிலா,
என்னைக் கொன்று கொன்று தின்றதே!
இன்பமான அந்த வலி,
இன்னும் வேண்டும் வேண்டும் என்றதே....!
(உன்னை)
ஏன் பிறந்தேன் என்று நான் இருந்தேன்.
உன்னைப் பார்த்தவுடன் உண்மை நான் அறிந்தேன்.
என் உயிரில் நீ பாதி என்று,
உன் கண்மணியில் நான் கண்டு கொண்டேன்.
எத்தனை பெண்களைக் கடந்திருப்பேன்,
இப்படி என் மனம் துடித்ததில்லை!
இமைகள் இரண்டையும் திருடிக் கொண்டு,
உறங்கச் சொல்வதில் நியாயமில்லை!
நீ வருவாயோ? இல்லை மறைவாயோ? ஏ ஏ ஏ ஏ ஏ!
தன்னைத் தருவாயோ? இல்லை கரைவாயோ?
(உன்னை)
நீ நெருப்பு என்று தெரிந்த பின்னும்,
உன்னைத் தொடத் துணிந்தேன் என்ன துணிச்சலடி?
மணமகளாய் உன்னைப் பார்த்த பின்னும்,
உன்னைச் சிறையெடுக்க மனம் துடிக்குதடி!
மரபு வேலிக்குள் நீ இருக்க,
மறக்க நினைக்கிறேன் முடியவில்லை!
இமயமலை என்று தெரிந்த பின்னும்,
எறும்பின் ஆசையோ அடங்கவில்லை!
நீ வருவயோ? இல்லை மறைவாயோ? ஏ ஏ ஏ ஏ ஏ!
தன்னைத் தருவாயோ? இல்லை கரைவாயோ?
(உன்னை)

74. நான் தான் சகலகலா வல்லவன்!

இளையராஜா, வாலி கூட்டணியில் அமைந்த துள்ளிசைப் பாடல்...! ஒவ்வொரு புத்தாண்டிலும் எல்லா திசைகளிலும் ஒலிக்கக்கூடிய பாடல் இது...!
-----------------------------------------------------
படம் : சகலகலாவல்லவன்
இசை : இளையராஜா
வரிகள் : வாலி
குரல் : S.P.பாலசுப்ரமணியம்
-----------------------------------------------------
Hai Everybody..! Wish u a happy new year!
இளமை இதோ..! இதோ...!
இனிமை இதோ..! இதோ...!
காலேஜ் டீனேஜ் பெண்கள்,
எல்லோர்க்கும் என் மீது கண்கள்!
(இளமை)
வாலிபத்தில் மன்மதன், லீலைகளின் மன்னவன்!
ராத்திரியில் சந்திரன், ரசிகைகளின் இந்திரன்!
நானாடும் ஆட்டம் பாருங்கள்... நிகரேது கூறுங்கள்!
நான் பாடும் பாட்டைக் கேளுங்கள்... கைத்தாளம் போடுங்கள்!
ஊர் போற்றவே பேர் வாங்குவேன்....!
நான் தான் சகலகலா வல்லவன்!
(இளமை)
இந்தியிலும் பாடுவேன், வெற்றி நடை போடுவேன்!
ஏக் து ஜே கேலியே, ஏண்டி நீ பாத்தியே!
எனக்காக ஏக்கம் என்னம்மா? களத்தூரின் கண்ணம்மா!
உனக்காக வாழும் மாமன் நான், கல்யாண ராமன் தான்!
நாள்தோறும் நான் ஆள் மாறுவேன்...!
நான் தான் சகலகலா வல்லவன்!
(இளமை)
கம்பெடுத்து ஆடுவேன், கத்திச் சண்டை போடுவேன்!
குத்துவதில் சூரன் நான், குஸ்திகளில் வீரன் தான்!
எனை யாரும் ஏய்த்தால் ஆகாது, அதுதானே கூடாது!
எனை வெல்ல யாரும் கிடையாது, எதிர்க்கின்ற ஆளேது?
யார் காதிலும் பூச்சுற்றுவேன்....!
நான் தான் சகலகலா வல்லவன்!
(இளமை)

73. வானமே தாழலாம், தாழ்வதில்லை தன்மானம்!

ரஜினி படப் பாடல்கள் என்றாலே ஓர் உத்வேகம், எழுச்சி எல்லாம் இருக்கும். இந்தப் பாடலும் அதற்கு விதிவிலக்கல்ல. வைரமுத்துவின் வரிகள் சோர்ந்து போனவர்களுக்கு நல்லதொரு மருந்து..! எனக்குப் பிடித்த வரிகள்....
"மேடு பள்ளம் இல்லாமல், வாழ்வில் என்ன சந்தோஷம்?
பாறைகள் நீங்கினால், ஓடைக்கில்லை சங்கீதம்!"

--------------------------------------------------
படம் : அண்ணாமலை
இசை : தேவா
வரிகள் : வைரமுத்து
குரல் : S.P.பாலசுப்ரமணியம்
--------------------------------------------------
வெற்றி நிச்சயம், இது வேத சத்தியம்!
கொள்கை வெல்வதே, நான் கொண்ட லட்சியம்!
என்னை மதித்தால் என்னுயிர் தந்து காப்பேன்!
என்னை மிதித்தால் இரண்டில் ஒன்று பார்ப்பேன்!
அடே நண்பா! உண்மை சொல்வேன்!
சவால் வேண்டாம், உன்னை வெல்வேன்!
(வெற்றி)
இமயமலை ஆகாமல், எனது உயிர் போகாது!
சூரியன் தூங்கலாம், எனது விழி தூங்காது!
வேர்வை மழை சிந்தாமல், வெற்றி மலர் தூவாது!
எல்லையைத் தொடும் வரை, எனது கட்டை வேகாது!
ஒவ்வொரு விதையிலும் விருட்சம் ஒளிந்துள்ளதே!
ஒவ்வொரு விடியலும் எனது பெயர் சொல்லுதே!
பணமும் புகழும் உனது கண்ணை மறைக்கிறதே!
(அடே நண்பா)
(வெற்றி)
இன்று கண்ட அவமானம், வென்று தரும் வெகுமானம்!
வானமே தாழலாம், தாழ்வதில்லை தன்மானம்!
மேடு பள்ளம் இல்லாமல், வாழ்வில் என்ன சந்தோஷம்?
பாறைகள் நீங்கினால், ஓடைக்கில்லை சங்கீதம்!
பொய்மையும் வஞ்சமும் உனது பூர்வீகமே!
ரத்தமும் வேர்வையும் எனது ராஜாங்கமே!
எனது நடையில் உனது படைகள் பொடிபடுமே!
(அடே நண்பா)
(வெற்றி)

72. என்னம்மா கண்ணு?

இந்தப் பாடல் வரிகளைப் படிக்கும்போதே பாடலின் இசை நம் மனதை ஆட்கொள்கின்றது! அந்த அளவுக்கு மேற்கத்திய இசையை திறமையாகக் கையாண்டிருப்பார் இளையராஜா! பெரும்பாலான மேடை நிகழ்ச்சிகளில் ரசிகர்களை ஆட்டம் போட வைக்கும் ஒரு பாடல்! பல இசை ரசிகர்களின் All Time Favourite ஆக இந்தப் பாடல் கண்டிப்பாக இருக்கும்.
--------------------------------------------------------
படம் : மிஸ்டர் பாரத்
இசை : இளையராஜா
வரிகள் : வாலி
குரல் : S.P.பாலசுப்ரமணியம் & மலேசியா வாசுதேவன்
--------------------------------------------------------
ம:
என்னம்மா கண்ணு?
பா:
சொல்லம்மா கண்ணு!
ம:
என்னம்மா கண்ணு செளக்கியமா?
பா:
ஆமாம்மா கண்ணு செளக்கியந்தான்!
ம:
யானைக்குச் சின்னப்பூனை போட்டியா? - துணிஞ்சு
மோதித்தான் பட்டபாடு பாத்தியா?
பா:
யாருக்கும் அஞ்சிடாத சிங்கந்தான் - உரசிப்
பாருங்க மங்கிடாத தங்கந்தான்!
(என்னம்மா)
ம:
வெள்ளிப் பணம் என்னிடத்தில் கொட்டிக் கிடக்கு!
வெட்டிப்பயல் உன்னிடத்தில் என்ன இருக்கு?
பா:
சத்தியத்தைப் பேசுகின்ற நெஞ்சம் இருக்கு!
உத்தமனா நீயிருந்தா மீசை முறுக்கு!
ம:
சத்தியத்தை நம்பி ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ!
லாபமில்லை தம்பி ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ!
பா:
நிச்சயமா நீதி ஹா ஹா ஹா ஹா ஹா!
வெல்லும் ஒரு தேதி ஹா ஹா ஹா ஹா ஹா!
ம:
உன்னால தான் ஆகாது, வேகாது!
பா:
கொஞ்சந்தானே வெந்திருக்கு மிச்சம் வேகட்டும்...ஹா!
(என்னம்மா)
ம:
எப்பவும் நான் வச்ச குறி தப்பியதில்லே!
என்னுடைய சொல்லையாரும் தட்டியதில்லே!
பா:
இன்னொருவன் என்னவந்து தொட்டதுமில்லே!
தொட்டவனைத் தப்பிக்க நான் விட்டதுமில்லே!
ம:
மீசையிலே மண்ணு ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ!
ஒட்டினதை எண்ணு ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ!
பா:
பாயும் புலி நான் தான் ஹா ஹா ஹா ஹா ஹா!
பாக்கப்போறே நீ தான் ஹா ஹா ஹா ஹா ஹா!
ம:
சும்மாவுந்தான் பூச்சாண்டி காட்டாதே!
பா:
நம்மகிட்டே போடுறியே தப்புத்தாளந்தான்...ஹா!
(என்னம்மா)

Monday, April 10, 2006

71. ஐயங்காரு வீட்டு அழகே!

வைரமுத்துவின் வார்த்தை ஜாலங்களுக்கு எல்லையே இல்லை என்பதை நிரூபிக்கும் பாடல்...! ஒவ்வொரு வரியையும் அனுபவித்து எழுதியிருக்கிறார். கர்நாடக சங்கீதத்துடன் தொடங்கும் பாடல், பின் மெல்லிசைப் பாடலாக மாறுகிறது...! நல்ல மெட்டமைந்த பாடல்.
-------------------------------------------------------
படம் : அந்நியன்
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்
வரிகள் : வைரமுத்து
குரல் : ஹரிஹரன் & ஹரிணி
-------------------------------------------------------
ஆ:
ஐயங்காரு வீட்டு அழகே!
(ஐயங்காரு)
உன் போல் அழகி பிறக்கவும் இல்லை!
இனிமேல் பிறந்தால் அது நம் பிள்ளை!
பெ:
உன்போல் சமத்து உலகினில் இல்லை!
காதலன் சமத்து காதலில் தொல்லை!
ஆ:
அறியாமைதான் இங்கே பேரின்பம் அன்பே!
காதலின் வகுப்பில் மாணவன் தான் பண்டிதனே!
(ஐயங்காரு)
ஆ:
மகரந்தப் பொடிகளை எடுத்து - அதில்
மஞ்சள் தங்கம் கொஞ்சம் இட்டு இடித்து,
திருக் கன்னம் எங்கும் சுண்ணம் பூசி வண்ணம் செய்தானோ?
ஒரு கோடிப்பூக்கள் கொண்டு ஜோடிப்பூக்கள் செய்தானோ?
பெ:
உன்னுதடு சேர்ந்தால், பூப்படையும் வார்த்தை!
நம்முதடு சேர்ந்தால் பூப்படையும் வாழ்க்கை!
ஆ:
அள்ளிச் சேர்த்தேன் உந்தன் உயிருக்குள் அனுமதி ஒருமுறை!
(ஐயங்காரு)
பெ:
ஆ....! உச்சி வானைத் தட்டித்தாவி இழுத்து,
பொன் நட்சத்திரத் தோரணங்கள் சமைத்து,
நீ முத்துத்தாமப் பந்தற் கீழே மாலை கொள்வாயா?
உன் முத்தத்தாலே வானும் மண்ணும் ஈரம் செய்வாயா?
ஆ:
வான் மழையில் நனைந்தால் பயிர்கள் உருவாகும்!
ஆண் மழையில் நனைந்தால் உயிர்கள் உருவாகும்!
பெ:
தயங்காதே மெல்லத் தொடங்கட்டும் அழகிய தவறுகள்!
(ஐயங்காரு)

70. சேலை மூடும் இளஞ்சோலை

இளையராஜா, வைரமுத்து கூட்டணியில் இசை ரசிகர்களின் மனத்தைக் கொள்ளை கொண்ட ஒரு படம் இது...! எனக்குப் பிடித்த வரிகள்...
"கைகள் இடைகளில் நெளிகையில், இடைவெளி குறைகையில்,
எரியும் விளக்கும் சிரித்து கண்கள் மூடும்!"

-----------------------------------------------------------
படம் : நினைவெலாம் நித்யா
இசை : இளையராஜா
வரிகள் : வைரமுத்து
குரல் : S.P.பாலசுப்ரமணியம்
-----------------------------------------------------------
பனி விழும் மலர் வனம், உன் பார்வை ஒரு வரம்!
(பனி விழும்)
இனிவரும் முனிவரும், தடுமாறும் கனிமரம்!
(பனி விழும்)
சேலை மூடும் இளஞ்சோலை, மாலை சூடும் மலர்மாலை
(சேலை)
இருபது நிலவுகள் நகமெங்கும் ஒளி விடும்!
இளமையின் கனவுகள் விழியோரம் துளிர் விடும்!
கைகள் இடைகளில் நெளிகையில், இடைவெளி குறைகையில்,
எரியும் விளக்கும் சிரித்து கண்கள் மூடும்!
(பனி விழும்)
காமன் கோயில் சிறைவாசம், காலை எழுந்தால் பரிகாசம்
(காமன்)
தழுவிடும் பொழுதிலே இடம் மாறும் இதயமே!
வியர்வையின் மழையிலே பயிராகும் பருவமே!
ஆடும் இலைகளில் வழிகிற நிலவொளி இருவிழி
மழையில் நனைந்து மகிழும் வானம்பாடி..!
(பனி விழும்)

Friday, April 07, 2006

69. காடு மலை நதிகள் எல்லாம் காதலின் சின்னமே!

தன் இசைக்குப் போட்டி என்று இசைஞானி இளையராஜாவால் பாராட்டப்பட்டவர் இந்த பாலபாரதி...!(ஏதோ ஒரு பத்திரிகையில் படித்தது). இவர் போன்ற இசைக்கலைஞர்கள் நிலைக்காமல் போனதற்கு யாரைக் குறை சொல்ல முடியும்? இந்தத் திரைப்படத்தை ஒரு முறை பார்ப்பதற்கு முன்புவரை இதன் இசையமைப்பாளர் இளையராஜா என்றுதான் நினைத்திருந்தேன்.
------------------------------------------------------------
படம் : அமராவதி
இசை : பாலபாரதி
வரிகள் : வைரமுத்து
குரல் : S.P.பாலசுப்ரமணியம் & S.ஜானகி
------------------------------------------------------------
ஆ:
தாஜ்மகால் தேவை இல்லை, அன்னமே! அன்னமே!
பெ:
காடு மலை நதிகள் எல்லாம் காதலின் சின்னமே!
ஆ:
இந்த பந்தம் இன்று வந்ததோ?
பெ:
ஏழு ஜென்மம் கண்டு வந்ததோ?
ஆ:
உலகம் முடிந்தும் தொடரும் உறவிதுவோ?
(தாஜ்மகால்)
ஆ:
பூலோகம் என்பது, பொடியாகிப் போகலாம்,
பொன்னாரமே! நம் காதலோ,
பூலோகம் தாண்டி வாழலாம்!
பெ:
ஆகாயம் என்பது இல்லாமல் போகலாம்,
ஆனாலுமே நம் நேசமோ
ஆகாயம் தாண்டி வாழலாம்!
ஆ:
கண்ணீரில் ஈரமாக்கி கறையாச்சு காதலே!
பெ:
கறை மாற்றி நாமும் மெல்ல கரை ஏற வேண்டுமே!
ஆ:
நாளை வரும், காலம் நம்மைக் கொண்டாடுமே!
(தாஜ்மகால்)
பெ:
சில்வண்டு என்பது, சில மாதம் வாழ்வது,
சில்வண்டுகள், காதல் கொண்டால்,
செடி என்ன கேள்வி கேட்குமா?
ஆ:
வண்டாடும் காதலைக் கொண்டாடும் கூட்டமே,
ஆணும் பெண்ணும் காதல் கொண்டால்,
அது ரொம்ப பாவம் என்பதா?
பெ:
வாழாத காதல் ஜோடி என் இம்மண்ணில் கோடியே!
ஆ:
வாழாத பேர்க்கும் சேர்த்து வாழ்வோமே தோழியே!
பெ:
வானும் மண்ணும் பாடல் சொல்லும் நம் பேரிலே..!
(தாஜ்மகால்)

68. தேவையும், சேவையும் கேட்கும் காதலி!

காதல் சொட்டச் சொட்ட எழுதி இருக்கிறார் கவிஞர்! ஒரு பெண்ணின் பார்வையில் ஒரு ஆணால் இவ்வளவு காதல் செய்ய முடியுமா? வைரமுத்து வைரமுத்துதான்! முதல் சரணத்தில் தன் தேவையையும், இரண்டாம் சரணத்தில் தன் சேவையையும் காதலி சொல்வதாய் அமைந்த பாடல் இது...! இதில் இடம்பெறும் "நேற்று முன்னிரவில்" வரிகள், கவிஞரின் "பெய்யெனப் பெய்யும் மழை" கவிதைத்தொகுப்பில் இடம்பெற்ற வரிகள். சாதனா சர்கமுக்கு நிறைய தமிழ் ரசிகர்களை ஏற்படுத்திக் கொடுத்த பாடல் இது எனலாம். மணிரத்னமும், P.C.ஸ்ரீராமும் இந்தப்பாடலை வெள்ளித்திரையில் அற்புதமாக இழைத்திருப்பார்கள். A.R.ரஹ்மான் இசை பற்றிச் சொல்லவே தேவையில்லை.
---------------------------------------------------------
படம் : அலைபாயுதே
இசை : A.R.ரஹ்மான்
வரிகள் : வைரமுத்து
குரல் : சாதனா சர்கம் & ஸ்ரீநிவாஸ்
---------------------------------------------------------
ஆ:
நேற்று முன்னிரவில், உன் நித்திலப்பூ மடியில்,
காற்று நுழைவது போல், உயிர் கலந்து களித்திருந்தேன்!
இன்று பின்னிரவில், அந்த ஈர நினைவில்,

கன்று தவிப்பது போல், மனம் கலங்கிப் புலம்புகிறேன்!
கூந்தல் நெளிவில் எழில் கோலச்சரிவில்....

கூந்தல் நெளிவில் எழில் கோலச்சரிவில்....
கர்வம் அழிந்ததடி...! என் கர்வம் அழிந்ததடி.....!
பெ:
சிநேகிதனே! சிநேகிதனே! ரகசிய சிநேகிதனே!
சின்னச் சின்னதாய் கோரிக்கைகள் செவி கொடு சிநேகிதனே!
இதே அழுத்தம் அழுத்தம், இதே அணைப்பு அணைப்பு,
வாழ்வின் எல்லை வரை வேண்டும்....வேண்டும்!
வாழ்வின் எல்லை வரை வேண்டும் வேண்டுமே!
(சிநேகிதனே)
பெ:
சின்னச் சின்ன அத்து மீறல் புரிவாய்!
என் செல் எல்லாம் பூக்கள் பூக்கச் செய்வாய்!
மலர்கையில் மலர்வாய்!
பூப்பறிக்கும் பக்தன் போல மெதுவாய்,
நான் தூங்கும் போது விரல் நகம் களைவாய்!
சத்தமின்றி துயில்வாய்!
ஐவிரல் இடுக்கில் ஆலிவ் எண்ணெய் பூசி,
சேவகம் செய்ய வேண்டும்!
நீ அழும்போது நான் அழ நேர்ந்தால்,
துடைக்கின்ற விரல் வேண்டும்!

(சிநேகிதனே)
(நேற்று முன்னிரவில்)
பெ:
சொன்னதெல்லாம் பகலிலே புரிவேன்...!
சொன்னதெல்லாம் பகலிலே புரிவேன்!
நீ சொல்லாததும் இரவிலே புரிவேன்!
காதில் கூந்தல் நுழைப்பேன்!
உந்தன் சட்டை நானும் போட்டு அலைவேன்!
நீ குளிக்கையில் நானும் கொஞ்சம் நனைவேன்!
உப்பு மூட்டை சுமப்பேன்!
உன்னை அள்ளி எடுத்து, உள்ளங்கையில் மடித்து,
கைக்குட்டையில் ஒளித்துக் கொள்வேன்!
வேளைவரும் போது, விடுதலை செய்து,
வேண்டும் வரம் வாங்கிக் கொள்வேன்!
(சிநேகிதனே)

Wednesday, April 05, 2006

67. மின்னல் தூரிகையில் எழுதிய ஓவியம் அவள்!

அதீதமான காதல் வயப்பட்ட கவிஞனின் வார்த்தைகள் இவை...! இசையும், வரிகளும் அற்புதம்!
------------------------------------------------
படம் : ஜீன்ஸ்
இசை : A.R.ரஹ்மான்
வரிகள் : வைரமுத்து
குரல் : ஹரிஹரன் & குழு
------------------------------------------------
ஆ:
அன்பே அன்பே கொல்லாதே!
கண்ணே கண்ணைக் கிள்ளாதே!
பெண்ணே புன்னகையில் இதயத்தை வெடிக்காதே!
ஐயோ உன்னசைவில் உயிரைக் குடிக்காதே!
(அன்பே)
ஆ:
பெண்ணே உனது மெல்லிடை பார்த்தேன்,
அடடா பிரம்மன் கஞ்சனடி!
சற்றே நிமிர்ந்தேன், தலை சுற்றிப் போனேன்,
ஆஹா அவனே வள்ளலடி!
மின்னலைப் பிடித்து, தூரிகை சமைத்து,
ரவிவர்மன் எழுதிய வதனமடி!
நூறடிப் பளிங்கை ஆறடியாக்கி
சிற்பிகள் செதுக்கிய உருவமடி!
இதுவரை மண்ணில் பிறந்த பெண்ணில்,
நீதான் நீதான் அழகியடி!
இத்தனை அழகும் மொத்தம் சேர்ந்து,
என்னை வதைப்பது கொடுமையடி!
(அன்பே)
கு:
கொடுத்து வைத்த பூவே! பூவே!
அவள் கூந்தல் மணம் சொல்வாயா?
கொடுத்து வைத்த நதியே! நதியே!
அவள் குளித்த சுகம் சொல்வாயா?
கொடுத்து வைத்த கொலுசே!
காலளவைச் சொல்வாயா?
கொடுத்து வைத்த மணியே!
மாரழகைச் சொல்வாயா?
ஆ:
அழகிய நிலவில் ஆக்ஸிஜன் நிரப்பி,
அங்கே உனக்கொரு வீடு செய்வேன்!
உன்னுயிர் காக்க என்னுயிர் கொண்டு,
உயிருக்கு உயிராய் உறையிடுவேன்!
மேகத்தைப் பிடித்து மெத்தைகள் அமைத்து,
மெல்லிய பூ உன்னைத் தூங்க வைப்பேன்!
தூக்கத்தில் மாது வேர்க்கின்ற போது,
நட்சத்திரம் கொண்டு நான் துடைப்பேன்!
பால் வண்ணப் பறவை குளிப்பதற்காக,
பனித்துளியெல்லாம் சேகரிப்பேன்!
தேவதை குளித்தத் துளிகளை அள்ளி,
தீர்த்தம் என்றே நான் குடிப்பேன்
(அன்பே)

66. சங்கீதம் சந்தோஷம்!

M.S.விஸ்வநாதனின் துள்ளல் இசையில், S.P.Bன் குரல் ஜாலத்தில்...ஜாலியான பாட்டுதான்! வெறொன்றும் சொல்வதற்கில்லை.
-------------------------------------------------
படம் : நினைத்தாலே இனிக்கும்
இசை : M.S.விஸ்வநாதன்
வரிகள் : கண்ணதாசன்
குரல் : S.P.பாலசுப்ரமணியம்
-------------------------------------------------
எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோஷம்!
ராத்திரிகள் வந்து விட்டால் சாத்திரங்கள் ஓடிவிடும்!
(எங்கேயும்)
கட்டழகுப் பெண்ணிருக்கு!
வட்டமிடும் பாட்டிருக்கு!
தொட்ட இடம் அத்தனையும்,
இன்பமின்றி துன்பமில்லை!
ரா ரா ரா ரி…ஓ!
(எங்கேயும்)
காலம் சல்லாபக் காலம்!
உலகம் உல்லாசக் கோலம்!
இளமை ரத்தங்கள் ஊரும்!
உடலில் ஆனந்தம் ஏறும்!
இன்றும் என்றும் இன்ப மயம்!
தித்திக்கத் தித்திக்கப் பேசிக்கொண்டு,
திக்குகள் எட்டிலும் ஓடிக் கொண்டு,
வரவை மறந்து செலவு செய்து,
உயரப் பறந்து கொண்டாடுவோம்!
(கட்டழகு)
(எங்கேயும்)
காலை ஜப்பானில் காபி!
மாலை நியூயார்க்கில் காபரே!
இரவில் தாய்லாந்தில் ஜாலி!
இனிமேல் நமக்கென்ன வேலி?
இங்கும் எங்கும் நம்முலகம்!
உலகம் நமது பாக்கெட்டிலே!
வாழ்க்கை பறக்கட்டும் ராக்கெட்டிலே!
இரவு பொழுது நமது பக்கம்!
விடிய விடிய கொண்டாடுவோம்!
(கட்டழகு)
(எங்கேயும்)
ஆடை இல்லாத மேனி!
அவன் பேர் அந்நாளில் ஞானி!
இன்றோ அது ஒரு ஹாபி!
எல்லோரும் இனிமேல் பேபி!
வெட்கம் துக்கம் தேவை இல்லை!
தட்டட்டும் தட்டட்டும் கைகள் ரெண்டும்!
come on everybody!
தாவட்டும் ஆடட்டும் கால்கள் ரெண்டும்!
join me...! ஹே! ஹே! ஹே! ஹே!
(தட்டட்டும்)
கடவுள் படைத்த உலகம் இது,
மனித சுகத்தை மறுப்பதில்லை!
(கட்டழகு)
(எங்கேயும்)

Tuesday, April 04, 2006

65. சூடித் தந்த சுடர்க்கொடியே!

திருப்பாவை வரிகளோடு தொடங்கும் இப்பாடல் A.R.ரஹ்மான் இசைப் பிரியர்களுக்குப் பிடித்த பாடலாகக் கண்டிப்பாக இருக்கும். வைரமுத்துவின் வரிகளோடு கூடிய நல்ல மெல்லிசைப் பாடல் இது...!
------------------------------------------------
படம் : சங்கமம்
இசை : A.R.ரஹ்மான்
வரிகள் : வைரமுத்து
குரல் : உன்னி கிருஷ்ணன் & S.ஜானகி
------------------------------------------------
கு:
மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்

சீர் மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்

ஏரார்ந்த கண்ணி யசோதை இளம் சிங்கம்...!
பெ:
மார்கழித் திங்களல்லவா? மதிகொஞ்சும் நாளல்லவா?
இதுகண்ணன் வரும் பொழுதல்லவா?
ஒருமுறை உனது திருமுகம் பார்த்தால்
விடை பெறும் உயிரல்லவா?
(ஒருமுறை)
வருவாய், தலைவா! வாழ்வே வெறும் கனவா?
(மார்கழி)
பெ:
இதயம் இதயம் எரிகின்றதே!
இறங்கிய கண்ணீர் அணைக்கின்றதே!
உள்ளங்கையில் ஒழுகும் நீர்போல்,
என்னுயிரும் கரைவதென்ன?
இருவரும் ஒரு முறை காண்போமா?
இல்லை நீ மட்டும் என்னுடல் காண்பாயா?
கலையென்ற ஜோதியில் காதலை எரிப்பது,
சரியா? பிழையா? விடை நீ சொல்லய்யா...!
(மார்கழி)
ஆ:
சூடித் தந்த சுடர்க்கொடியே! சோகத்தை நிறுத்திவிடு!
நாளை வரும் மாலையென்று, நம்பிக்கை வளர்த்துவிடு!
நம்பிக்கை வளர்த்துவிடு....!
நம் காதல் ஜோதி.. கலையும் ஜோதி...
கலைமகள் மகளே வா வா!
ஆ..ஆ...ஆ.......!
காதல் ஜோதி கலையும் ஜோதி...!
ஆ!
ஜோதி எப்படி, ஜோதியை எரிக்கும்?
(ஜோதி)
வா.......!
(மார்கழி)

64. வெயிலோ முயலோ பருகும் வண்ணம் வெள்ளைப் பனித்துளி ஆவேனோ?

ஓர் ஐந்து நிமிடங்களுக்கு என்னை மறக்கச் செய்யும் பாடல் இது....! இசை, வரிகள், பாடல், படமாக்கப்பட்ட விதம் எல்லாவற்றிலும் என்னை அசத்திய மிகச்சில பாடல்களில் இதுவும் ஒன்று. அந்தச் சின்ன செடியாகட்டும், விக்ரம் தண்ணீர் குடிக்கும் காட்சியாகட்டும், அருவி விழும் காட்சியாகட்டும், எல்லாமுமே நம்மை எங்கோ இழுத்துச் செல்கின்றன...! எனக்குப் பிடித்தவரிகள்...எல்லா வரிகளும்......
------------------------------------------------------
படம் : சாமுராய்
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்
வரிகள் : வைரமுத்து
குரல் : ஹரிஹரன்
------------------------------------------------------
மூங்கில் காடுகளே! வண்டு முனகும் பாடல்களே!
தூரச் சிகரங்களில் தண்ணீர் துவைக்கும் அருவிகளே!
ஹோ! ஹோ! ஹோ! ஹோ!
(மூங்கில்)
இயற்கைத் தாயின் மடியைப் பிரிந்து,
எப்படி வாழ இதயம் தொலைந்து?
சலித்துப் போனேன் மனிதனாய் இருந்து...
பறக்க வேண்டும் பறவையாய் திரிந்து...
திரிந்து, பறந்து, பறந்து.....!
(மூங்கில்)
சேற்றுத் தண்ணீரில், மலரும் சிவப்புத் தாமரையில்,
சேறு மணப்பதில்லை, பூவின் ஜீவன் மணக்கிறதே!
வேரை அறுத்தாலும், மரங்கள் வெறுப்பை உமிழ்வதில்லை!
அறுத்த நதியின் மேல் மரங்கள் ஆனந்தப் பூச்சொரியும்!
தாமரைப் பூவாய் மாறேனோ?
ஜென்ம சாபல்யங்கள் காண்பேனோ?
மரமாய் நானும் மாறேனோ?
என் மனிதப் பிறவியில் உய்யேனோ?
வெயிலோ முயலோ பருகும் வண்ணம்
வெள்ளைப் பனித்துளி ஆவேனோ?
(மூங்கில்)
உப்புக் கடலோடு மேகம் உற்பத்தி ஆனாலும்,
உப்புத் தண்ணீரை மேகம் ஒரு போதும் சிந்தாது!
மலையில் விழுந்தாலும் சூரியன் மறித்துப் போவதில்லை,
நிலவுக்கு ஒளியூட்டித் தன்னை நீட்டித்துக் கொள்கிறதே!
மேகமாய் நானும் மாறேனோ?
அதன் மேன்மை குணங்கள் காண்பேனோ?
சூரியன் போலவே மாறேனோ?
என் ஜோதியில் உலகை ஆள்வேனோ?
ஜனனம் மரணம் அறியா வண்ணம்
நானும் மழைத்துளி ஆவேனோ?
(மூங்கில்)